“தப்பு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேல.. இப்படி அழுகறதே வேலை” – உண்மையை உடைத்த வெங்கடேஷ் பிரசாத்

0
636
Prasad

இந்தியாவிற்கு வரும்பொழுது எல்லாம் அதிகபட்ச குற்றச்சாட்டுகளை கூறக்கூடிய அணியாக இங்கிலாந்து அணி இருந்திருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது.

ஆனால் இந்த முறை இங்கிலாந்து அணியினர் இந்திய ஆடுகளங்கள் குறித்து எந்தவிதமான புகார்களையும் சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார்கள். இந்த மாற்றம் உண்மையில் ஆச்சரியமாக இருந்தது.

- Advertisement -

மேலும் பயிற்சியை இந்தியாவில் ஆரம்பிக்காமல் அபுதாபியில் இந்திய சூழ்நிலையை ஒத்து ஆடுகளங்களை அமைத்து, ஒன்பது நாட்கள் சிறப்பு பயிற்சி பெற்று அங்கிருந்து இந்தியா வந்திருக்கிறார்கள்.

இங்குதான் சிக்கல்கள் ஆரம்பித்தது. இங்கிலாந்து அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் சுழற் பந்துவீச்சாளர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட சோயப் பஷீர் விசா பிரச்சனை காரணமாக இங்கிலாந்து அணியுடன் வர அடையவில்லை.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படையாக முன்வைத்து பேசி இருந்தார்.

- Advertisement -

அடுத்து இங்கிலாந்தின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட், பஷீர் வரும் வரை இங்கிலாந்து டெஸ்ட் விளையாட கூடாது என்று பேசி இருந்தார். அந்த அளவிற்கு இந்த விவகாரங்கள் மிக தீவிரமாக சென்று கொண்டிருந்தது. மேலும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட உஸ்மான் கவாஜாவுக்கும் இதே நடந்தது என்று இங்கிலாந்து தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது.

இதையும் படிங்க : “கோலி ஜடேஜா கிடையாது.. இந்த 2 பேர்தான் டீம்ல இப்ப ரொம்ப முக்கியம்” – கேப்டன் ரோகித் சர்மா பேச்சு

ஆனால் இந்திய முன்னால் வீரர் வெங்கடேஷ் பிரசாத் மூலமாக உண்மை தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறும் பொழுது “சோயப் பசீர் விசாவை இங்கிலாந்தில் வைத்து முத்திரை குத்த வேண்டும். ஆனால் அவரை நேராக யுஏஇக்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அனுப்பிவிட்டது. மூன்றாவது நாட்டில் வைத்துமுத்திரை குத்த முடியாது. இப்படி அடிப்படை நடைமுறைகளை பின்பற்றாமல், ஏதாவது சொல்லி அழுவது ஆங்கிலேயர்களின் பழைய முறை. இதில் யாராவது தவறு செய்திருப்பார்கள் என்றால் அது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்தான்” என்று கூறி இருக்கிறார்.

மேலும் சோயப் பஷீர் விசா குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறும்போது ” தற்பொழுது அவருக்கு விசா கிடைத்து விட்டது. இந்த வார இறுதியில் அவர் அணியுடன் இணைவார். இப்போது நிலைமை சரி செய்யப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.