டீம்ல ஒரு மலையாளி இருந்தா அந்த மேஜிக் நடக்கும்.. சஞ்சுவை சேர்த்தது மாஸ்டர் ஸ்ட்ரோக் – வருண் சக்கரவர்த்தி பேச்சு

0
3
Varun

இந்திய டி20 அணி உலகக்கோப்பையை வென்றதில் சஞ்சு samsung செலுத்திய தாக்கம் குறித்து வருண் சக்கரவர்த்தி நகைச்சுவையான முறையில் பேசி இருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக பும்ரா உடன் இணைந்து வருண் சக்கரவர்த்தியும் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். தற்போது தனது பந்துவீச்சை இன்னும் கூர்மையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

- Advertisement -

மல்லு மேஜிக்

நேற்று நமன் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வருண் சக்கரவர்த்தி சஞ்சு சாம்சன் மற்றும் இந்திய டி20 அணியின் எழுச்சி குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது “தற்போது ஒரு மீன் மிகவும் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அதாவது நம்முடைய அணியில் ஒரு மல்லு (மலையாளி) இருந்தால் நாம் தோற்க மாட்டோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் சஞ்சு சாம்சனை இந்திய டி20 அணியில் கொண்டு வந்தது பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக்”

- Advertisement -

இன்னும் சில ஆண்டுகள் தொடரும்

” யாராவது என்னிடம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அணி எந்த இடத்தில் இருக்கும் என்று என்னிடம் கேட்டிருந்தால், தற்போது இருக்கும் நிலையில் இருக்கும் என்று யாராலும் கற்பனை செய்திருக்க முடியாது. நான் இன்னும் சில உலகக் கோப்பைகளை வெல்ல விரும்புகிறேன். நாம் இன்னும் குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்துவோம்”

இதையும் படிங்க : கடந்த 18 மாதத்தில் நானும் தவறு செய்திருக்கிறேன்.. விராட் ரோஹித் விஷயத்தில் என் பதில் இதுதான் – கம்பீர் பேச்சு

“இது நாம் எந்த அளவுக்கு புதிய திறமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுகிறது. மேலும் நாம் அதிகப்படியான திறமையாளர்களை உருவாக்குகிறோம். இத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை அற்புதமாக வளர்த்துள்ளது. இதற்கான பெருமை வாரியத்திற்கு சேரும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -