இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வரும் சக்கரவர்த்தி விளையாடத அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி
நேற்று சாம்பியன்ஸ் டிராபிக்கு இறுதி செய்யப்பட்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இருந்து ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருந்தார். பும்ரா உடல் தகுதியை எட்டாத நிலையில் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல்முறையாக இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற வருண் சக்கரவர்த்தி உடனடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது கிரிக்கெட் கேரியர் தற்போது ஏறுமுகத்தில் இருக்கிறது.
திடீரென நடந்த சோகம்
இந்த நிலையில் ஒரே ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்கும் வருண் சக்கரவர்த்திக்கு தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது அவருக்கு சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்ல இன்னும் உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இதையும் படிங்க : ஸ்டோய்னிஸ் திடீர் ரிட்டயர்மென்ட் தப்பு.. பின்னணியில ஐபிஎல் இருக்குது – ஆரோன் பின்ச் விமர்சனம்
இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வலது காலில் ஏற்பட்ட வலியின் காரணமாக அவர் விளையாடவில்லை என கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் நிகழ்வின்போது தெரிவித்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் வருண் சக்கரவர்த்தி காயம் அடைந்திருப்பது கவலையை அதிகரித்து இருக்கிறது. சீக்கிரத்தில் அவருடைய காயம் சரியாக வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பும்ரா இல்லாத நிலையில் வருண் சக்கரவர்த்தியின் தேவை அதிகரித்திருக்கிறது!






