நேற்று நடந்த முடிந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக வருண் சக்கரவர்த்தி வந்திருக்கிறார். அவருக்கு இந்த உலகக்கோப்பை தொடர் எப்படி அமைந்தது? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் மொத்தம் ஒன்பது போட்டிகளில் வரும் சக்கரவர்த்தி மொத்தம் 13 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் அவரே அதிக விக்கெட் கைப்பற்றியவராக சாதனை படைத்திருக்கிறார்.
திடீர் வீழ்ச்சி
வருண் சக்கரவர்த்தி இந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றில் இருந்து பெரிய அளவில் ரன்கள் கொடுக்க ஆரம்பித்தார். அவரைக் குறிவைத்து எதிர் அணிகள் அடித்தன. இதை இரண்டாவது சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆரம்பித்து வைத்தது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து செமி பைனலில் வரும் சக்கரவர்த்தியின் நான்கு ஓவர்களில் 64 ரன்கள் குவித்தது. மேலும் அவர் கொஞ்சம் பதட்டத்துடன் இருப்பது போல தெரிந்தது. அவர் எப்படி பந்து வீசலாம் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரையில் சிலர் ஆலோசனைகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
என் ரோல் இதுதான்
இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி பேசும் பொழுது ” அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. மேலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் அபிஷேக் ஷர்மா இந்த போட்டியில் ரன் அடித்ததும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஏனென்றால் அவர் என்னுடன் அமர்ந்து இது குறித்து நிறைய பேசியிருக்கிறார்”
“நான் நிறைய ரன்கள் கொடுத்தாலும் எதிர் அணியின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட ரோல். வெளியில் தான் என்னுடைய பந்துவீச்சில் நிறைய ரன்கள் செல்கிறது என்ற பேச்சுகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் அணியில் இருந்து யாரும் இதுவரை என்னிடம் அப்படி கூறியது இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.






