ஐபிஎல் 2024

ஹர்திக் நீங்க எதுக்கு குஜராத் விட்டு மும்பை வந்தீங்க? இந்திய டீம்ல சேர்க்கவே யோசிக்கறாங்க – வருண் ஆரோன் பேச்சு

நடப்பு ஐபிஎல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் ஹர்திக் பாண்டியாவுக்கும் அழுத்தம் நிறைந்ததாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் சில முடிவுகள் குறித்து வருண் ஆரோன் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

2024 ஐபிஎல் சீசனில் தற்பொழுது ஒன்பது போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வென்று, ஆறு போட்டிகளில் தோற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதே புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் பஞ்சாப் மற்றும் பத்தாவது இடத்தில் பெங்களூரு அணிகள் இருக்கின்றன.

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக மிகவும் வெற்றிகரமாக இருந்து, அதன் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டனாகவும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் உயர்ந்தார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதே அளவு தாக்கத்தை இரண்டாம் பகுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் வெற்றிகரமான குஜராத் டைட்டன்ஸ் அணி உடனான தனது பயணத்தை முறித்துக் கொண்டு, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பியது மோசமான பக்க விளைவுகளை உருவாக்கி இருக்கிறது. தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ஹர்திக் பாண்டியா செயல்பாடு சிறப்பாக இல்லாதது, டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்வதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா தன்னை மேட்ச் வின்னர் என்று நிரூபித்த ஒரு வீரர். தற்போது அவர் சிறந்த நிலையில் இல்லை என்று எனக்கு தெரியும். மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றிலும் நிறைய இரைச்சல்கள் இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு அதிக அழுத்தம் இருக்கிறது. நான் குஜராத் அணிக்கு அவ்வளவு வெற்றிகரமான கேப்டனாக இருந்திருந்தால், நிச்சயம் மும்பை அணிக்கு வந்திருக்க மாட்டேன். இதுதான் அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது.

இதையும் படிங்க : சும்மா ஐபிஎல்-ல குறை சொல்லாதிங்க.. பேட்ஸ்மேன்களை பாராட்டுங்க – இந்திய வீரர்கள் மீது கைப் விமர்சனம்

ஆனால் அவர் தற்பொழுது மும்பைக்கு வந்து விட்டார். அவர் ஏன் மும்பை அணியை நேசிக்கிறார் என்று எனக்கு புரிகிறது. அவருக்கு ஒரு பெரிய மேடையை அந்த அணி ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கையில் உருவாக்கி தந்தது. ஆனால் அவருக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒரு பெரிய வெற்றி பாரம்பரியம் உருவாகி இருந்தது. அவர் இந்த அழுத்தங்களிலிருந்து வெளிவரும் பொழுது நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார்” என்று கூறி இருக்கிறார்.

Published by