இந்திய கிரிக்கெட்

வெறும் 10 இன்னிங்ஸ்.. ஆஸியில் யூத் கிரிக்கெட்டில் வைபவ் சூரியவன்சி உலக சாதனை.. மிரட்டல் பேட்டிங்

ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வைபவ் சூரியன்வன்சி உலகச் சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 35 பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக 14 வயதில் வைபவ் சூரியவன்சி பிரம்மாண்ட சாதனையை படைத்தார்.

ஆஸ்திரேலியா மண்ணில் அசத்தல்

தற்போது இந்திய அண்டர் 19 அணி சிஎஸ்கே அணிக்கு ஆயுஸ் மாத்ரே தலைமையில் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஸ் மாத்ரே இரண்டு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

அதே சமயத்தில் இன்னொரு தொடக்க ஆட்டக்கார வைபவ் சூர்யவன்சி முதல் 10 ஓவர்களில் பொறுமை காட்டி அடுத்து வழக்கமான அதிரடியில் மிரட்டினார். இறுதியில் 68 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

சூரியவன்சியின் உலகச் சாதனை

இதுவரையில் இளைஞர்கள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக இந்தியாவின் முன்னாள் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற கேப்டன் உன்முக்த் சந்த் இருந்து வந்தார். அவர் 21 அண்டர் 19 போட்டிகளில் மொத்தம் 38 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : அபிஷேக்குக்கு இருப்பது வித்தியாசமான டெக்னிக்.. அந்த பையன் அடிச்சு நொறுக்க இதான் காரணம் – மஞ்ச்ரேக்கர் விளக்கம்

வைபவ் சூரியவன்சி இன்று 6 சிக்ஸர்கள் அடித்ததின் மூலமாக குறைந்த இன்னிங்ஸ்களில் இளைஞர் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு அவருக்கு மொத்தம் வெறும் 10 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by