இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்கார அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுவதற்கு பின்னணியில் உள்ள பேட்டிங் தொழில்நுட்பம் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விளக்கமாக கூறியிருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா மொத்தம் நான்கு போட்டிகளில் விளையாடி 208.43 ஸ்ட்ரைக் ரேட்டில், 43.25 ஆவரேஜில் 173 ரன்கள் எடுத்திருக்கிறார்.
அபிஷேக் அதிரடிக்கு காரணம்
இதுகுறித்து பேசி உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது ” அபிஷேக் ஷர்மா ஃபுட் வொர்க்கை பார்க்கும் பொழுது அதில் ஏதோ ஒன்று இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழக்கும்போது அவரது ஃபுட் வொர்க் பற்றி அதிகம் பேசுகிறார்கள். அவருடைய கால் நகராத காரணத்தினால் அவர் ஆட்டம் இழந்து விட்டார் என்று கூறுகிறார்கள்”
“அதே சமயத்தில் அபிஷேக் ஷர்மாவை பார்க்கும் பொழுது அவர் தனது கால்களை அதிகம் நகர்த்தி விளையாடுவதே கிடையாது. அப்படியே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எதிர் விதமாக அவர் விளையாடுகிறார். இங்கு அவர் பந்தை பார்க்கிறார் அதே சமயத்தில் தன்னுடைய கால்களை முன்னும் பின்னும் ஆக அதிகம் அசைக்காமல் இருப்பதில் கவனமாக இருக்கிறார்”
மிக முக்கியமானது இதுதான்
“மேலும் அபிஷேக் ஷர்மா தன்னுடைய காலை ஒரு பக்கமாக நகர்த்தி நன்றாக இடம் கொடுத்துக் கொள்கிறார். ஏனென்றால் அவருடைய பேட் கீழே இறங்கி வந்து பந்தை பலமாக தாக்குவதற்கு எந்த இடையூறும் இல்லாத அளவுக்கு பார்த்துக் கொள்கிறார். இதனால்தான் அவரால் பந்தை சரளமாக அடிக்க முடிகிறது”
இதையும் படிங்க : 4 அணிக்கும் பைனல் வாய்ப்பு.. பங்களாதேஷை நம்பி இலங்கை.. இந்தியா என்ன செய்ய வேண்டும்? – முழு விவரங்கள்
“நீங்கள் உங்களுடைய காலை நகர்த்தி இடம் கொடுக்காத பொழுது, கீழே இறங்கி வரும் பொழுது பேட் கீழே இறங்கி வரும் பொழுது, உங்களுடைய கால் இடைஞ்சலாக நடுவில் இருக்கும். இதனால் உங்களால் சுதந்திரமாக தந்தை அடித்து விளையாட முடியாது. மேலும் அபிஷேக் சர்மாவுக்கு கண் மற்றும் கைகளில் ஒருங்கிணைப்பு மிகவும் பிரமாதமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






