138 SR.. டெஸ்ட் கிரிக்கெட்டும் ஆட வரும்.. ரஞ்சியில் மிரட்டிவிட்ட வைபவ் சூரியவன்சி.. அசத்தல் பேட்டிங்

0
224
Vaibhav

நடப்பு ரஞ்சி டிராபியில் மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக வைபவ் சூர்யவன்சி தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை கைவிடாமல் விளையாடி அசத்தியிருக்கிறார்.

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் மிக வேகமாக வைபவ் சூரியவன்சியை படிப்படியாக வளர்த்து இந்திய அணிக்குள் அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறது. வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய ஏ அணிக்கு வைபவ் சூரியவன்சி இன்று தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிரட்டிய சூரியவன்சி

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பீகார் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த மேகாலய அணி முதல் இன்னிங்ஸில் அஜய் டுகான் 129 ரன்கள் எடுக்க, ஏழு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹிம்மன்சு சிங் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பீகார் அணிக்கு வைபவ் சூரியவன்சி அதிரடியான ஆட்டத்தால் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். மொத்தம் 67 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் எடுத்த சதத்தை தவறவிட்டு ஆட்டம் இழந்தார். தற்போது பீகார் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ தொலைநோக்கு முடிவு

இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஆட்ட சூழ்நிலை புரிந்து எப்படி விளையாடுவது என்பதற்கான சிறப்பு பயிற்ச்சியை வைபவ் சூரியவன்சிக்கு இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு சூரியவன்சி ஆஸ்திரேலியா இங்கிலாந்து அண்டர் 19 அணிகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : எங்களோட 1983 வெற்றியும் பெண்கள் பெற்ற வெற்றியும் ஒன்னு கிடையாது.. அப்படி ஒப்பிடாதீங்க – கவாஸ்கர் வேண்டுகோள்

வைபவ் சூரியவன்சி தனது திறமையின் மூலமாக ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்கும் திறமையை இந்த 14 வயதிலேயே பெற்றிருக்கிறார். இதன் காரணமாக அவரை மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -