2025 விஜய் ஹசாரே டிராபியில் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக வைபவ் சூரியவன்சி ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். மேலும் இதன் மூலம் ஒரு புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.
இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி இன்று முதல் துவங்கி நடைபெறுகிறது. ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய தொடராக இது அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. மேலும் அந்தத் தொடரில் யுஏஇ மற்றும் மலேசியா போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய வைபவ் சூரியவன்சி பெரிய இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற பெரிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை.
இந்த நிலையில் அவர் துபாயில் அந்த தொடரை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருந்தார். எனவே அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் உடனடியாக பெரிய ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடி இருந்தது. இந்த நிலையில் முதல் போட்டியிலேயே மாபெரும் உலகச் சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியன் அதிரடியாக விளையாடி 36 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 84 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உடன் 194 ரன்கள் குவித்து இரட்டை சதத்தை தவறவிட்டார். 30 ஓவர்களுக்கு உள்ளாகவே பீகார் அணி 300 ரன்கள் தொட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க : இந்தியா ODI டி20 தொடர்.. நியூசிலாந்து அணி அறிவிப்பு.. புதிய திட்டங்கள்.. ஸ்டார் வீரர் இல்லை
இந்த நிலையில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் என அழைக்கப்படும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலகச் சாதனையை இதன் மூலம் வைபவ் சூரியவன்சி படைத்திருக்கிறார். இதற்கு முன்னால் இந்த சாதனையை ஏபி டிவில்லியர்ஸ் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.