மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி பும்ராவின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். தற்போது இது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட பும்ரா பந்துவீச்சை மிகவும் எச்சரிக்கையாக எதிர்கொள்வார்கள். ஆனால் 15 வயதான வைபவ் சூரியவன்சி மிகவும் அனாயசமாக எதிர்கொண்டு சிக்ஸர்கள் அடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரகாசமான எதிர்காலம்
ஒரு நாட்டுக்காக கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு 15 வயதாக வேண்டும் என்கின்ற விதி இருக்கிறது. இந்த மார்ச் மாதம் வைபவ் சூரியவன்சிக்கு 15 வயது ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரை முதலில் இந்திய டி20 அணியில் அறிமுகப்படுத்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவரை வெறும் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு மட்டும் பயன்படுத்தாமல், மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் வாய்ப்புகள் கொடுப்பதற்கு, தேசிய கிரிக்கெட் அகாடமி மூலமாக தொடர்ந்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவரை இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலமாக இந்திய கிரிக்கெட் வாரியம் பார்க்கிறது.
இந்த பயிற்சியை செய்தேன்
இதுகுறித்து வைபவ் சூரியவன்சி பேசும் பொழுது “நான் ஒரு பெரிய பவுலரை எதிர்த்து விளையாடுகிறேன் என்பது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. நான் பவுலரை விட பந்தில்தான் கவனம் செலுத்த நினைத்தேன். அவ்வளவு பெரிய பும்ரா என் முன்னால் இருந்ததால் கொஞ்சம் பதட்டமாக இருந்தது உண்மை. நான் எனது ஆட்டத்தை நம்பி பதட்டத்தை விட்டு விட்டு பந்தில் கவனம் செலுத்தினேன்”
இதையும் படிங்க : மில்லர் 5வது பந்தில் ரன் எடுக்காதப்ப இதைத்தான் நினைச்சேன்.. ஒவ்வொரு போட்டியும் இப்படியே போகுது – கில் பேச்சு
“நான் போட்டிக்கு முதல் நாள் சீக்கிரமாகவே வலை பயிற்சிக்கு சென்று விட்டேன். அங்கு எனக்கு குறுகிய தூரத்தில் இருந்து பந்தை மிக வேகமாக ஏறி வாருங்கள். இப்படியான பயிற்சிகள் போட்டியின் போது பந்தை எதிர்கொள்வதற்கு நிறைய நேரத்தை எனக்கு கொடுக்கிறது. கடந்த போட்டிக்கு பிறகு என் பேட்டிங்கை மேம்படுத்த நான் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் முன்கூட்டியே பயிற்சிக்கு சென்றேன். அது எனக்கு மும்பை போட்டியில் உதவியது” என்று கூறி இருக்கிறார்.






