இன்று 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூரியவன்சி 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் தன்னை ஸ்லெட்ஜிங் செய்த யுஏஇ விக்கெட் கீப்பர் குறித்து பேசி இருக்கிறார்.
தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 19 வயது உட்பட்டவர்களுக்கான 50 ஓவர் வடிவில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்று இந்திய அணி யுஏஇ அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் வைபவ் சூரியவன்சி 56 பந்துகளில் சதம் அடித்து, மொத்தம் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார்.
அவருடைய வேலையை அவர் செய்தார்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய யுஏஇ அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற வைபவ் சூரியவன்சி பேசும் பொழுது “நான் விளையாடும் பொழுது விக்கெட் கீப்பர் என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து விஷயங்களை சொல்லிக் கொண்டே இருப்பது அவர்களுடைய வேலை. நான் என்ன செய்ய விரும்புகிறேனோ, அதை நான் செய்தேன்”
என்னை நம்பி ஆரம்பித்தேன்
“நான் என்னை முதலில் செட்டில் செய்து கொள்வதற்காக 10 முதல் 12 பண்புகளை பொறுமையாக விளையாடி நேரத்தை எடுத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு நான் என்னை நம்பி முழுவதுமாக அடிப்பதற்கு சென்றேன்”
இதையும் படிங்க : நானும் கில்லும் அத செஞ்சிருக்கணும்.. அக்சர் 3வது இடத்தில வந்தது இதனாலதான் – கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி
“நான் ஒரு ரிவர்ஸ் ஸ்லீப் மற்றும் ஸ்கூப் ஷாட் விளையாடினேன். போட்டிக்கு முன்பாக நான் இந்த ஷாட்களை பயிற்சி செய்து வந்தேன். எனவே இதை நான் ஆட்டத்தில் வெளிப்படுத்தினேன்” என்று கூறியிருக்கிறார்.






