வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் குறித்து, வீரேந்திர சேவாக்கின் முல்தான் ட்ரிபிள் செஞ்சுரியுடன் ஒப்பிட்டு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எல். பாலாஜி பேசியுள்ளார்.
யுஏஇ அணிக்கு எதிராக லிஸ்ட் ஏ போட்டியில் சூர்யவன்ஷி 204 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். 2004-ல் பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் 309 ரன்கள் எடுத்த போட்டியில் இந்திய அணியில் பாலாஜி இடம்பெற்றிருந்தார்.
இதுகுறித்து எல். பாலாஜி பேசும்போது, “வீரேந்திர சேவாக்கின் ட்ரிபிள் ஹண்ட்ரட் வழியாக எனது பயணத்தில் மிகச் சிறந்த சில இன்னிங்ஸ்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதை சேவாக்கின் ட்ரிபிள் ஹண்ட்ரட்டுக்கு சமமாக நான் வைப்பேன்”
“நிச்சயமாக, எதிரணி சிறியது என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், வரவிருக்கும் ஆண்டுகளில், அவரிடமிருந்து ஏதோ ஒரு சிறப்பான விஷயத்தை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று கூறி இருக்கிறார்.






