அவசர தயாரிப்பு.. ஹர்திக் பாண்டியா இடத்தில் சிவம் துபே.. சிஎஸ்கே செய்த பெரிய உதவி!

0
217
Hardik

பொதுவாக உலக கிரிக்கெட்டில் வேகப்பந்து ஆல்ரவுண்டர்களுக்கு எப்பொழுதும் பற்றாக்குறை இருந்து வந்திருக்கிறது. ஏனென்றால் வேகப்பந்து வீச்சு வேலையை செய்து கொண்டு பேட்டிங்கும் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

பெரிய அளவில் இதற்கு உடல் தகுதி தேவைப்படும். தொடர்ச்சியான உழைப்பை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எனவே பெரும்பாலும் எந்த வீரர்களும் இந்த இரட்டை குதிரையில் சவாரி செய்ய இளம் வயதிலேயே விரும்ப மாட்டார்கள். இந்தியா மாதிரியான நாடுகளில் பயிற்சியாளர்களே வீரர்களை இப்படி உருவாக்குவதில்லை. ஏனென்றால் காயம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

- Advertisement -

உலக கிரிக்கெட்டிலேயே இப்படி இருக்கும் பொழுது, இந்திய கிரிக்கெட்டில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. டி20 கிரிக்கெட்டுக்கு என பத்து தனிப்பட்ட பிரான்சிசைஸ் அணிகளை வைத்திருக்கக் கூடிய இந்தியாவில், வருகின்ற டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா இடத்தில் மாற்றாக ஒருவர் இல்லை என்பது இந்தக் கருத்தை புரிய வைக்கும்.

ஆனாலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்தச் சூழ்நிலையை புரிந்து, தற்பொழுது மும்பையைச் சேர்ந்த மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் வலதுகை மிதவேகப் பந்து வீச்சு இடதுகை பேட்ஸ்மேன் சிவம் துபேவை மெதுவாக தயார் செய்து கொண்டிருக்கிறது. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் அடைபவராக இருப்பதால், இவரை அவருடைய இடத்திற்கு பார்க்க ஆரம்பித்து இருக்கிறது.

- Advertisement -

நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இரண்டு ஓவர்களில் ஒன்பது ரன்கள் தந்து ஒரு விக்கெட்டும், 40 பந்துகளை சந்தித்து ஆட்டம் இழக்காமல் 60 ரன்கள் எடுத்தும், சிவம் துபே இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

இவருடைய பெரிய பலமாக பவர் ஹிட்டிங் பேட்டிங் இருக்கிறது. இந்த இடத்தில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை அருமையாக உருவாக்கி பயன்படுத்தியது. அவருடைய பலம் எதுவோ அதை செய்ய அனுமதித்தது. அதற்கு பேட்டிங் வரிசையில் சரியான இடத்தில் இறங்க செய்தது. முழு சுதந்திரத்தையும் கொடுத்தத

இதன் காரணமாக சிவம் துபேவின் அதிரடி பேட்டிங் திரும்ப வந்தது. அவர் அணியில் வெற்றிக்கு பங்காற்ற ஆரம்பித்தார். இது அவருடைய விளையாட்டுத் தன்னம்பிக்கையை அதிகரித்தது. மேலும் இந்த தன்னம்பிக்கை உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காகவும் வெளிப்பட்டது. மேலும் அவர் தனது பந்துவீச்சிலும் தற்பொழுது நல்ல கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

இந்த வகையில் தற்பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு ஓரளவுக்காவது சரியான மாற்று வீரரை உருவாக்கிக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு, ஐபிஎல் தொடரில் மூலமாக சிவம் துபேவை உருவாக்கி சிஎஸ்கே அணி நல்ல நம்பிக்கை கொடுத்திருக்கிறது. தன்னுடைய வளர்ச்சிக்கு சிஎஸ்கே அணியும் மகேந்திர சிங் தோனியும்தான் காரணம் என்று சிவம் துபே நேற்றும் பேசி இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -