கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

U19 உலககோப்பை.. முசிர் கான் 131.. 214 ரன் வித்தியாசம்.. நியூசிலாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி

இன்று 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சூப்பர் 6 சுற்று முதல் போட்டியில் மோதிக்கொண்டன.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் அர்சின் குல்கர்னி 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் ஆதர்ஸ் சிங் 45, கேப்டன் உதய் சகரன் 34 ரன்கள் எடுத்தார்கள்.

மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் சர்பராஸ் கான் தம்பி முசிறிக்கான் இந்தப் போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக 118 ரன்கள் அடித்திருந்தார்.

முசிர் கான் மொத்தமாக 126 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடித்து 131 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து மெதுவான ஆடுகளத்தில் கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆட்டத்தின் முதல் பந்திலேயே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ராஜ் லிம்பானி செக் வைத்தார்.

இதிலிருந்து நியூசிலாந்து அணியால் கடைசி வரை நிமிரவே முடியவில்லை. மொத்தமாக நியூசிலாந்து அணி 28.1 ஓவர் விளையாடி 81 ரன்களில் சுருண்டு விட்டது. இதன் மூலம் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தச் சுற்றில் இந்திய அணிக்கு நல்ல ரன் ரேட் கிடைத்திருக்கிறது.

இந்திய அணியின் பந்துவீச்சில் சௌமை பாண்டே 4, ராஜ் லிம்பானி 2, முஷிர் கான் 2, நமன் திவாரி மற்றும் அர்சின் குல்கர்னி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். ஆட்டநாயகனாக முசிர் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க : “அடுத்த டெஸ்ட்ல இது நடக்கும்.. இதுவரை செஞ்சதிலேயே பெருசா செய்ய போறோம்” – மெக்கலம் அதிரடி

இந்த உலகக் கோப்பை தொடரில் இளம் வீரர் முசிர் கான் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். எதிர்காலத்தில் இவர் ஐபிஎல் தொடரின் மூலமாக இன்னும் கவனம் ஈர்த்து இந்திய அணியிலும் இடம் பெறலாம்.

Published by