U19 உலக கோப்பை.. ஐபிஎல் லக்னோ அணி இளம்வீரர் அதிரடி சதம்.. 201 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி அசத்தல்

0
745
U19wc

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடரில் இன்று ஏ பிரிவில் இடம் பெற்று இருக்கும் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதிய போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஒரு துவக்க ஆட்டக்காரர் ஆதார் சிங் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

கடந்த இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக வாங்கப்பட்டு இருக்கின்ற, இந்தியாவின் அடுத்த ஹர்திக் பாண்டியாவாக வரக்கூடியவர் என்று கருதப்படுகிற மற்றும் ஒரு இளம் துவக்க ஆட்டக்காரர் அர்சன் குல்கர்னி இந்த போட்டியில் பேட்டிங்கில் மீண்டும் மிரட்டினார்.

மூன்றாவது இடத்தில் வந்த சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் உடன் இணைந்து அர்சன் குல்கர்னி மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த ஜோடி 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அயர்லாந்துக்கு எதிராக கடந்த போட்டியில் சதம் அடித்த முசிர் கான் இந்த போட்டியில் 76 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய அர்சன் குல்கர்னி 118 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து கேப்டன் உதய் சகரன் 35, மோலியா 27, சச்சின் தாஸ் 20, அவினாஷ் ஆரவல்லி 12 ரன்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.

பெரிய இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணியில் ஏறக்குறைய எல்லா வீரர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகவே இருந்ததுஆச்சரியமான ஒன்றாக இருந்தது.

இதையும் படிங்க : WTC புள்ளி பட்டியல்.. தோற்ற இந்தியாவுக்கும் சரிவு.. ஜெயித்த இங்கிலாந்துக்கும் சரிவு.. வினோதமான சம்பவம்

இதில் மேலும் ஒரு ஆச்சரியமாக அமெரிக்க அணி முழு 50 ஓவர்களும் விளையாடி எட்டு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஸ்ரீவஸ்தவா 40, அரேபலி 27, நட்கர்னி 20 என ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் நமன் திவாரி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.