சிஎஸ்கே அணியின் இரண்டு தவறுகள் மற்றும் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்!

0
270

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் மூலம் துவங்கியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக துவங்கியது இந்தியன் பிரீமியர் லீக்கின் இந்த வருடத்திற்கான தொடர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 178 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ருத்ராஜ் 50 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். இரண்டாவது பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியினர் 19.2 ஓவர்களில் 179 ரண்களை எடுத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். குஜராத் அணியின் சுப்மன் கில் சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட் மற்றும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரஷித் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது அவர்களது துவக்கம் ஒன்றாக இருந்தது. ஆனால் பத்தாவது ஓவருக்கு பிறகு ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது . மேலும் சிஎஸ்கே அணியின் அணித்தேர்வும் கிரிக்கெட் விமர்சகர்களால் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விமர்சகர்கள் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி செய்த இரண்டு தவறுகளையும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். மேலும் தோனி எடுத்த ஒரு முடிவு மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவும் அமைந்திருக்கிறது. அவை என்ன என்று பார்க்கலாம்.

அணித் தேர்வில் ஏற்பட்ட தவறு :
சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த போதும் மிகவும் பலகீனமான வெகு பந்துவீச்சாளர்களுடனே களம் இறங்கியது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நேற்றைய போட்டியில் அறிமுகமான ராஜ்வர்தன் .ஹங்கரேகர் துஷார் தினேஷ் பாண்டே மற்றும் தீபக் சஹார் ஆகிய வீரர்கள் மட்டுமே பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக இருந்தனர். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்பட்ட பிரிட்டோரியஸ் அணியில் இடம் பெறவில்லை. மேலும் சுழர்பந்து வீச்சிலும் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டக்காரர்களையே சிஎஸ்கே அணி பயன்படுத்தியது. இம்பேக்ட் பிளேயர் அறிவிக்கப்பட்ட வீரர்களிலும் மூன்று பேட்ஸ்மேன் மாற்று ஆட்டக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். முதலில் பேட்டிங் செய்யும் அணி இவ்வாறு வீரர்களை தேர்வு செய்தது ஏன் என்பதை அந்த அணி நிர்வாகம் தான் தெரிவிக்க வேண்டும்.

- Advertisement -

சிவம் துபேவை 13 வது ஓவரில் களம் இறக்கியது:
13-வது ஓவரில் அம்பட்டி ராயுடு ஆட்டம் இழந்ததும் சிவம் துபே களம் இறக்கப்பட்டார். டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் கைவசம் இருக்க அணி நிர்வாகம் தூபே களம் இறக்கியது. அவரது பவுன்சர் பந்துவீச்சிக்கு எதிரான பலகீனத்தை குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக கையாண்டனர். தொடர்ந்து ஹார்ட் லென்த் பந்துகளாக வீசி அவரை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினர். இறுதியில் 18 பந்துகளில் பெரும் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

மாஸ்டர் ஸ்ட்ரோக்:
சிஎஸ்கே அணியின் இளம் வீரர்கள் ஆன ருத்ராஜ் மற்றும் ஹர்ஷவர்தன் ஹங்கரேகர் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருத்ராஜ் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் 50 பந்துகளில் 92 ரன்களை அதிரடியாக எடுத்தார். ஹங்கரேகர் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இவர்கள் இருவரையும் தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் சிஎஸ்கே அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. கடந்த ஆண்டு முதலே அணியில் இடம் பெற்ற
ஹங்கரேகர் இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே ஆடும் வாய்ப்பை பெற்றார்.