ஐபிஎல் 2024

மேட்சுக்கு முன்னாடி அவர் ஒரு விஷயத்தை சொன்னார்.. அதுதான் எல்லாத்துக்கும் காரணம் – துஷார் தேஷ்பாண்டே பேட்டி

நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அந்த அணியின் வெற்றிக்கு துஷார் தேஷ்பாண்டே ஒரு முக்கிய காரணமாக இருந்தார். நேற்றைய போட்டிக்கு முன்பாக அணியில் என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது தீபக் சாஹர், முஸ்தஃபிசூர் ரஹமான் மற்றும் பதிரனா என மிக முக்கியமான வேகப்பந்துவீச்சாளர்கள் காயத்தின் காரணமாகவும் தேசிய அணிக்கு விளையாட வேண்டியதாலும் சிஎஸ்கே அணிக்கு கிடைக்காமல் இருக்கிறார்கள். இது அந்த அணியின் வேகப்பந்துவீச்சு யூனிட்டை பலவீனமாக மாற்றி இருந்தது.

இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டுக்கு தலைமை ஏற்க ஒரு பந்துவீச்சாளர் தேவை என்ற நிலையில், துஷார் தேஷ்பாண்டே மிக முக்கியமான போட்டியில் பவுலிங் யூனிட்டுக்கு தலைமை தாங்கி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

நேற்று அவருடைய முதல் ஓவரில் ஜானி பேர்ஸ்டோ அடுத்து ரைலி ரூசோவ் என இரு முக்கியமான விக்கெட்டுகளை நான்கு ஓவர்களுக்கு 35 ரன்கள் கொடுத்து கைப்பற்றினார். நேற்றைய போட்டிக்கு முன்பாக அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அணியில் இருந்து யார் பேசினார்கள்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “போட்டிக்கு முன்பாக பயிற்சியாளர் பிளம்மிங் என்னிடம் வந்து, மூன்று ஆண்டுகளாக நீங்கள் செய்த அனைத்து தயாரிப்புகளுக்குமான நேரம் வந்துவிட்டது. இன்று நீங்கள் பந்துவீச்சில் அணியை முன்னின்று வழிநடத்தி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது.

இதையும் படிங்க : நாங்க இப்பவே இந்த இந்திய வீரருக்கு எதிரா பிளான் பண்ணுவோம்… நியூயார்க் நிலைமையை பார்ப்போம் – பாபர் அசாம் பேட்டி

கடினமான சூழ்நிலை பற்றி நான் எப்பொழுதும் நினைப்பேன். அப்படியான நேரத்தில் நான் அணிக்கு என்னால் முடிந்ததை செய்வேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். 160 ரன்கள் எடுத்த போட்டியில் தனித்தனியாகவும் ஒரு அணியாகவும் சேர்ந்து வெற்றி பெற வேண்டியது முக்கியம். இது போன்ற போட்டியை வெல்வது என்னுடைய கேரக்டரை காட்டுகிறது. நான் அடியை மிகச் சிறந்த முறையில் எடுத்து வைக்கிறேன். அது நல்ல முறையில் செல்கிறது” என்று கூறி இருக்கிறார்.

Published by