நியூசிலாந்து அணியுடன் எனது உறவை முறித்துக்கொள்கிறேன் – திடீரென அறிவித்த டிரெண்ட் போல்ட்!! உண்மையான காரணம் இதுதான்..

0
9886

நியூசிலாந்து அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக நட்சத்திரமாகப் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் திடீரென அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுகை நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்த டிரெண்ட் போல்ட், இதுவரை 317 டெஸ்ட் விக்கெட்டுகள், 169 ஒருநாள் விக்கெட்டுகள் மற்றும் 62 டி20 விக்கெட்டுகள் என தொடர்ச்சியாக சிறந்த பங்களிப்பை கொடுத்து வந்திருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து அணி, கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன் தொடரை வென்றது. 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது. இவை இரண்டிற்கும் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சு மிகமுக்கிய காரணமாக இருந்தது என்றால் சற்றும் மிகையாகாது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதன் மேம்பாட்டிற்காக இனிவரும் காலங்களில் வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுப்பதற்கு முடிவு செய்திருக்கிறது. மேலும் தற்போது அணியில் விளையாடி வரும் வீரர்கள் விருப்பப்பட்டால் தங்களது ஒப்பந்தங்களை செய்து கொள்ளலாம் எனவும் நிபந்தனையில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் கேன் வில்லியம்சன் உட்பட பல முன்னணி வீரர்கள் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து அதில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

ஆனால், நியூசிலாந்து அணியுடன் முழுநேர ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என டிரெண்ட் போல்ட் திடீரென்று அறிவித்திருக்கிறார். அதற்கான காரணங்களையும் அவர் முன் வைத்திருக்கிறார். “எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிகவும் கடினமான முடிவு. குழந்தை பருவம் முதல் நியூசிலாந்து அணிக்கு விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்திருக்கிறது. அதை நான் நிறைவேற்றி தொடர்ச்சியாக எனது முழு பங்களிப்பை கொடுத்து வந்துள்ளேன். கடந்த 12 வருடங்கள் என்னால் எவ்வளவு முடியுமோ அதை அனைத்தையும் இந்த அணிக்காக கொடுத்திருக்கிறேன். இனிவரும் காலங்களில் எனது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் செலவழிக்க நினைக்கிறேன். அதனை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.”

- Advertisement -

“இனிமேலும் எனது நாட்டிற்காக விளையாட வேண்டும் எனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று எனது நினைவில் இருக்கிறது. நியூசிலாந்து அணியுடன் முழுநேர ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் எனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காது என்பதையும் நான் நினைவில் கொள்வேன். ஆனால் நீண்ட நாட்கள் காலமாக எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. ஆகையால் இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். வேகப்பந்துவீச்சாளர்களால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதை நான் உணர்வேன். காயம் அதிகமாக ஏற்படலாம். அந்த வயதையும் நான் எட்டிவிட்டேன். ஆகையால் இதுதான் சரியான நேரமாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.” என தனது அறிக்கையில் டிரெண்ட் போல்ட் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து நியூசிலாந்து அணியின் தலைமைச் செயல் அதிகாரி கூறுகையில், “டிரெண்ட் போல்ட் அவரது முடிவுக்கு நியாயமாக இருக்கிறார். மேலும் அவர் கூறிய காரணங்கள் மறுக்க முடியாதவை. தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி வருகிறார். பலதரப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடுகிறார். ஆகையால் அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக அவர் தொடர்ந்து பங்களிப்பை கொடுத்து வந்தது எங்கள் நினைவில் என்றும் இருக்கும். அவருக்கு உரிய மரியாதையை செலுத்துவோம். மேலும் அவரது செயல்பாடுகள் எங்களை பெருமிதம் செய்திருக்கிறது.” என்றார்.

- Advertisement -

“புதிய ஒப்பந்த விதிமுறை குறித்து டிரெண்ட் போல்ட் மற்றும் நாங்கள் இருவரும் தொடர்ந்து விவாதித்தோம். நியூசிலாந்து அணியின் புதிய தேர்வு முறை குறித்து அவரிடம் விளக்கமாக கூறினோம். இதனை அவர் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்” எனவும் தனது அறிக்கையில் நியூசிலாந்து அணி நிர்வாகத்தின் தலைமைச் செயல் அதிகாரி குறிப்பிட்டு இருந்தார்.