நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கான வலிமையான பிளேயிங் லெவன்!

0
858
jaffer

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என இழந்திருக்கிறது!

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இந்திய அணியை எதிர்த்து நாளை மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது!

- Advertisement -

இந்த முதல் போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா குடும்ப நிகழ்ச்சி காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்த ஆண்டில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நடக்க உள்ள நிலையில், ஆஸ்திரேலியா போன்ற பலமான அணி உடன் விளையாடுவது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு தொடராக இருக்கிறது.

எனவே இந்தத் தொடரை கைப்பற்றுவது இந்திய அணிக்கு மிக முக்கியமானது. நாளை விளையாட உள்ள முதல் ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் வலிமையான தனது பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மா இல்லாத நிலையில் மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் உடன் இசான் கிஷானை துவக்க வீரராக வைத்திருக்கிறார். வழக்கம்போல மூன்றாவது இடத்தில் விராட் கோலி வருகிறார்.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்ரேயாஸ் இடம்பெறாத நிலையில் நான்காவது இடத்தில் சூரிய குமாரை வைத்திருக்கிறார். ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுல் மற்றும் ஆறாவது இடத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருக்கிறார்.

வாசிம் ஜாபர் தனது லெவனில் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரையும் கொண்டு வந்திருக்கிறார். மேலும் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் இருக்கிறார்கள்.

வாசிம் ஜாபர் உடைய பிளேயிங் லெவனில் நம்பர் எட்டு வரை பேட்டிங் நீளம் இருக்கிறது. மேலும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வாசிம் ஜாஃபருடைய பிளேயிங் லெவன்:

இஷான் கிஷான் ( விக்கெட் கீப்பர்)
சுப்மன் கில்
விராட் கோலி
சூரியகுமார் யாதவ்
கேஎல்.ராகுல்
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
முகமது சமி
முகமது சிராஜ்