“ஜெயிச்சது சந்தோசம்.. ஆனா குல்தீப் மகிழ்ச்சியா இல்ல.. பசங்க மிரட்டிட்டாங்க!” – சூரியகுமார் பேச்சு!

0
2763
Surya

சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இந்த தொடரில் முதல் போட்டி முடிவில்லாமல் போக இரண்டாவது போட்டியை தென் ஆப்பிரிக்கா வென்றது. இந்த நிலையில் மிக முக்கியமான தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வெல்ல, முதலில் பேட்டிக் செய்த இந்திய அணி சூரியகுமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்கள், ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் 25 டேவிட் மில்லர் 35 ரன்கள் எடுத்தார்கள். மற்ற யாரும் குறிப்பிடும்படியான ரன்கள் எடுக்கவில்லை.

தென் ஆப்பிரிக்க அணி 13.5 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டு 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 17 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமமானது. இந்த போட்டியின் போது சூரிய குமார் யாதவ் காலில் காயமடைந்து வெளியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

போட்டி முடிவுக்கு பின் தொடர் நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருது வென்ற கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “நான் நன்றாக இருக்கிறேன். இப்பொழுது என்னால் நடக்க முடிகிறது. வெற்றி பெற்ற பக்கத்தில் இருப்பது ஒரு நல்ல உணர்வு. நாங்கள் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம்.

இதன் மூலம் நல்ல ரன்களை ஸ்கோர் போர்டில் வைத்து வெற்றி பெற நினைத்தோம். அணியின் வீரர்கள் நாள்தோறும் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் தங்கள் கேரக்டர்களை வெளிப்படுத்திய விதம் மகிழ்ச்சி தருகிறது.

குல்தீப் யாதவ் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். மூன்று விக்கெட் எடுத்தாலும் நான்கு விக்கெட் எடுத்தாலும் அவருக்கு போதாது. அவர் எப்பொழுதும் விக்கெட் எடுக்கும் பசியுடன் இருக்கிறார். இது அவரது பிறந்த நாளுக்கு நல்ல பரிசு. ஒவ்வொருவரும் அவர்களது விளையாட்டை புரிந்து கொள்ள வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!