32 ரன் 9 விக்கெட்.. டிஎன்பிஎல்-ல் அம்பயருடன் அஸ்வின் திடீர் சண்டை.. திண்டுக்கல் அணிக்கு நடந்த பரிதாபம்

0
1688
Ashwin

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கோவையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர் அஸ்வின் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என அபாரமாக விளையாடி வந்தார். அப்போது சாய் கிஷோர் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது, அஸ்வினின் காலில் பந்து பட்டது. ஆனால் பந்து லெஃப்ட் சைடுக்கு வெளியே பிட்ச் ஆகி அஸ்வினின் காலில் பட்டது. இதற்கு அவுட் தர மாட்டார்கள் என அஸ்வின் நினைக்க, நடுவர் கிருத்திகா அவுட் வழங்கினார்.

- Advertisement -

93 ரன்களில் ஆல் அவுட்

இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் நடுவர் கிருத்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது அவுட் கிடையாது என்றும் எப்படி நீங்கள் அவுட் கொடுத்தீர்கள் என்றும் அவர் கேட்டார். ஆனால் நடுவர் கிருத்திகா இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார். வேறு டிஆர்எஸ் இல்லை என்பதால் அஸ்வின் கோபத்தில் பேட்டை தனது காலில் அடித்து விட்டு சென்றுவிட்டார்.

மற்றொரு தொடக்க வீரரான சிவம் சிங் 32 ரன்களில் ஆட்டம் இழக்க திண்டுக்கல் அணி 6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு திண்டுக்கல் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்ததால் திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களில் ஆட்டம் இழந்தது.

- Advertisement -

பெண் நடுவருடன் வாக்குவாதம்

61 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோரில் திண்டுக்கல் அணி இருந்த நிலையில் அடுத்த 32 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. திருப்பூர் பந்துவீச்சில் சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளையும் இசக்கி முத்து 4 விக்கெட்டுகளையும், மதிவாணன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதையும் படிங்க: என் மேல தப்பான லேபிளை ஒட்டிட்டாங்க.. 3 விஷயத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் – புஜாரா வருத்தம்

பெண் நடுவரிடம் அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அஸ்வின் நடுவருடன் இவ்வாறு செயல்பட்டது தவறு என்றும் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள். இதனால் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -