சாஸ்திரி இடத்துக்கு கம்பீர் வரவே முடியாது.. இப்ப இந்திய டீமின் பிரச்சனையே அவர்தான்.. காரணம் இதான் – டிம் பெய்ன் பேட்டி

0
99
Paine

தற்போது இந்திய அணியின் பிரச்சனை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கிடையாது பயிற்சியாளர் கம்பீரின் அமைதியற்ற குணம் தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் விமர்சனம் செய்திருக்கிறார்.

விராட் கோலியின் பேட்டிங் பார்ம் பற்றி ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்த கருத்துக்கு, இந்திய பயிற்சியாளர் கம்பீர் காட்டமான முறையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு திருப்பி ரிக்கி பாண்டிங் தன்னுடைய பாணியில் பதிலடிக்கும் கொடுத்திருந்தார். கம்பீர் இப்படி செய்வது தவறானது என தற்பொழுது டிம் பெய்ன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தொடரும் பாண்டிங்-கம்பீர் சர்ச்சை

விராட் கோலி கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு மூன்று டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார், அவர் வேறு அணியாக இருந்திருந்தால் வெளியேற்றப்பட்டு இருப்பார். ஆனாலும் தற்போது ஆஸ்திரேலியாவில் அவர் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பதால் மீண்டும் சிறப்பாக வந்துவிடலாம் என்று ரிக்கி பாண்டிங் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசி இருந்த கம்பீர் ரிக்கி பாண்டிங் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன சம்பந்தம்? அவர் முதலில் தன்னுடைய ஆஸ்திரேலிய கிரிக்கெட் பற்றி மட்டும் யோசிக்கட்டும் என்று தடாலடியாக பேசியிருந்தார். மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடினமாக உழைக்கிறார்கள் அவர்களுக்கு ஆர்வமும் ரன் எடுக்கும் பசியும் இருக்கிறது எனவே அவர்கள் சாதிப்பார்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்திய அணியின் பிரச்சனையை கம்பீர்தான்

இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கூறும்பொழுது “கம்பீர் அப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் அவர் ரிக்கி பாண்டிங் எதிரணி வீரராகவே பார்க்கிறார். ஆனால் தற்பொழுது ரிக்கி பாண்டிங் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார். மேலும் அவர் கருத்து சொல்வதற்காக குறிப்பிட்ட நிறுவனத்தில் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்”

“மேலும் கூறிய கருத்தும் கவனிக்கப்பட்டது. தற்பொழுது விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் சரியாக இல்லை. ஆனால் எனக்கு இப்பொழுது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலை அளிப்பதாக தெரியவில்லை. கம்பீர் உடைய அமைதியற்ற குணம் தான் இந்திய கிரிக்கெட்டுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது” என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ஆஸி விமானம் ஏற முடியல.. டீம்ல யாரும் என்கிட்ட தொடர்பு கொள்ளலை.. நடந்தது இதுதான் – சர்துல் தாக்கூர் பேட்டி

“ரவி சாஸ்திரி பயிற்சியில் இன்று இந்திய அணி இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றது. அவர் வீரர்களை மிகச் சிறப்பாக உற்சாகப்படுத்தி கனவுகளை விதைத்தார். வீரர்களும் மிகவும் உற்சாகத்துடன் விளையாடினார்கள். ஆனால் புதிய பயிற்சியாளர் கம்பீரை பார்த்தால் முட்களுடன் கூடிய கண்டிப்பான அணியாக இருக்கிறது. இது பயிற்சி அளிப்பதற்கான சிறந்த வழி கிடையாது. இப்போது இது பொருத்தமாக இல்லை என்பதே என்னுடைய கவலை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -