போட்டியை இன்னைக்கே நடத்த பார்க்கிறோம்.. ஆனால் மழை எத்தனை மணிக்குள் நிற்கவேண்டும்? – நடுவர் கொடுத்த அப்டேட்

0
316

அகமதாபாத்தில் பெய்து வரும் மழை எத்தனை மணிக்குள் நிற்க வேண்டும்? போட்டியை நாளைக்கு தள்ளிவைக்க எதுவரை காத்திருப்பார்கள்? எனும் விவரங்களை பார்ப்போம்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இப்போட்டியைக்காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

- Advertisement -

அடுத்தடுத்து இரண்டாவது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் பைனலுக்குள் வந்திருக்கிறது. நடப்பு சாம்பியன் ஆகவும் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது முறையாக ஐபிஎல் பைனலுக்குள் வந்திருக்கிறது. ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும் இருக்கிறது.

இன்று நடைபெறவிருந்த போட்டியில் விடாமல் மழை பெய்து வருவதால் போட்டி துவங்குவதற்கு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. முன்னதாக 9 மணிக்குள் மழை நின்றால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படாமல் முழுமையாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மழை நிற்காமல் பெய்ததால், பின்னர் 10:30 மணிக்குள் மழை நின்று போட்டி துவங்கினால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் கொடுத்த அறிவிப்பின்படி, “11 மணிக்குள் மழை நிற்க வேண்டும். பிறகு தண்ணீர் வெளியேற்றுவதற்கும், ஈரப்பதத்தை சரி செய்வதற்கும் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் எடுக்கலாம். அதன் பிறகு போட்டி 7-8 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும்.” என்று நடுவர்கள் அறிவித்தனர்.

- Advertisement -

“ஒருவேளை 11 மணிக்குள் மழை நிற்கவில்லை என்றால், போட்டி ரிசர்வ் நாளுக்கு தள்ளி வைக்கப்படும். அதாவது நாளை மீண்டும் துவங்கும்.” என்று நடுவர்கள் கூறினர். மேலும், “போதுமானவரை இன்று போட்டியை நடத்துவதற்கு பார்ப்போம். ரசிகர்களை மீண்டும் உள்ளே கொண்டு வருவது மற்றும் மற்ற வேலைப்பாடுகளும் நடைபெற வேண்டும் போன்ற பல சிக்கல்கள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் இன்று நடத்துவதற்கு பார்க்கிறோம்.” என்றும் அவர்கள் கூறினர்.

ஐபிஎல் வரலாற்றின் இறுதி போட்டியில் இதுபோன்று மழையின் குறுக்கீடு இருந்ததில்லை. போட்டி ரிசர்வ் நாளுக்கும் தள்ளி வைக்கப்பட்டதில்லை. ஒருவேளை இன்று தள்ளி வைக்கப்பட்டால், இதுதான் முதல்முறையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.