கோல்டன் டக் ஆனேன்.. அடுத்து நம்பவே முடியல.. கடவுளுக்கு அடுத்து எனக்கு இவர்தான் – திலக் வர்மா பேட்டி

0
1147
Tilak

இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற திலக் வர்மா போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் 109, திலக் வர்மா 120 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

மெகா இலக்கை நிர்ணயித்த இந்திய அணி

இந்திய அணி 20 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் குவித்தது. மேலும் இந்திய அணிக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இது இரண்டாவது பெரிய ஸ்கோர் ஆக அமைந்தது. மேலும் போட்டி நடந்த வான்ட்டரஸ் மைதானம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்க மண்ணில் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்னாக இது பதிவாகியது.

இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்டப்ஸ் 29 பந்தில் 43 ரன்கள், டேவிட் மில்லர் 27 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா அணி முதல் 10 ரன்கள் எடுத்து முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து அங்கேயே தோற்றுவிட்டது. இறுதியில் தென் ஆபிரிக்க அணி 148 ரன்கள் எடுத்து 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

கடவுளுக்கும் அவருக்கும் நன்றி

இந்த தொடரில் மொத்தம் 240 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்ற திலக் வர்மா பேசும் பொழுது “கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் விளையாடிய போது நான் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனேன். எனது ஆட்டம் அணிக்கும் மற்றும் எனக்கும் முக்கியமான ஒன்றாக இருந்தது. நான் பார்மையும் நம்பிக்கையையும் வைத்து எனது அடிப்படை விஷயங்களில் ஒட்டிக் கொள்ள விரும்பினேன். நான் அமைதியாகவும் அடிப்படை விஷயங்களில் கவனமாகவும் இருந்தேன்”

இதையும் படிங்க : 135 ரன் வித்தியாசம்.. 24க்கு 22.. சாம்சன் திலக் அர்ஷ்தீப் அசத்தல்.. இந்திய அணி தொடரை வென்றது.. தென் ஆப்பிரிக்கா தோல்வி

“இங்கு நான் சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை. இதை நம்ப முடியாத உணர்வாக இருக்கிறது. அதுவும் தென் ஆப்பிரிக்காவில் அடித்ததை என்னால் மறக்கவே முடியாது. கடவுளுக்கும் என்னுடைய கேப்டன் சூரிய குமாருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக காயத்தில் இருந்த நான் என்னுடைய செயல் முறையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். நான் சதத்தை அடித்த பொழுது எனது கடவுளை நோக்கி சென்றேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -