இந்திய கிரிக்கெட்

151 ரன்.. டி20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை.. திலக் வர்மா அதிரடி சதம்.. 14 பவுண்டரி 10 சிக்ஸ் ருத்ர தாண்டவம்

தற்போது இந்தியாவில் தொடங்கியுள்ள உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி டிராபியில் திலக் வர்மா ஐதராபாத் அணிக்காக மேகாலயா அணிக்கு எதிராக சதம் அடித்து டி20 வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் டி20 வடிவத்திற்கு நடத்தப்படும் மிகப்பெரிய உள்நாட்டு டி20 தொடராக சையத் முஸ்டாக் அலி டிராபி இருக்கிறது. இந்த வருடத்திற்கான சையத் முஸ்டாக் அலி டிராபி இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் திலக் வர்மா சதம் அடித்து அபார சாதனையை டி20 வரலாற்றில் படைத்திருக்கிறார்.

67 பந்தில் 151 ரன்கள்

இன்று சையத் முஸ்டாக் அலி டிராபியில் மேகலயா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் தன்மய் அகர்வால் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஆர்.சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபாரமாக விளையாடிய அவர் இந்த போட்டியில் அதிரடி சதம் அடித்தார். மொத்தம் 67 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் 151 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

டி20 வரலாற்றில் முதல் முறை

திலக் வர்மா தென் ஆப்ரிக்கா டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். நான்கு போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் நான்கு போட்டிகளிலும் அவர் விளையாடினார். இதில் அவர் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்து இருந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரு சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சம்சனுக்கு பிறகு படைத்தார்.

இதையும் படிங்க: 19.36.. 7வது சம்பவம்.. ஆஸி பவுலர்கள் சொந்த மண்ணில் செய்யாத காரியம்.. பும்ரா தனி சாதனை

இதைத்தொடர்ந்து அடுத்த போட்டியாக சையத் முஸ்டாக் அலி டிராபியில் இன்று மேகாலயா அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இன்று மீண்டும் திலக் வர்மா சதம் அடித்திருக்கிறார். இது அவருக்கு ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்றாவது சதமாக அமைந்திருக்கிறது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts