கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இப்ப இதுக்கு என்ன சொல்ல போறிங்க ஸ்டோக்ஸ்? இந்திய அணியை முடிச்சுவிட்ட 3 முடிவுகள்.. ரசிகர்கள் கேள்வி

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்து வருகிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது. ஆடுகளத்தில் பவுன்ஸ் சில நேரங்களில் மிகவும் தாழ்வாக இருக்கின்ற காரணத்தினால் இது நல்ல ரன்னாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது முதல் இன்னிசை இன்று துவங்கி விளையாடிய இந்திய அணி முக்கிய ஏழு விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது. நூறு ரன்களுக்கும் மேலாக இங்கிலாந்து அணியை விட பின்தங்கி இருக்கிறது.

இந்த ஆடுகளம் நான்காவதாக இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது இன்னும் மிக மோசமாக இருக்கும். எனவே இருநூறு ரன்களை துரத்துவதே கடினமாக அமையும். இதன் காரணமாக இந்திய அணி இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை விட மிகவும் பின்தங்கி கீழே இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்திருக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு அவருடன் இணைந்து விளையாடிய சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால் சோயப் பஷீர் பந்தில் 38 ரன்களில் எல்பி டபிள்யு ஆனார். ரிவியூ எடுத்தபொழுது பந்து மிகவும் சிறிய அளவில் மட்டுமே டெம்பில் பட்டு அம்பயர்-கால் ஆனது. இதற்கு அம்பயர் அவுட் தராமல் இருந்திருந்தால், இங்கிலாந்து ரிவ்யூ செய்து இருந்தாலும் அது அவுட் கிடையாது.

இதேபோல் இவருக்கு அடுத்து களம் இறங்கிய ரஜத் பட்டிதார் 17 ரன்கள் எடுத்து நல்ல முறையில் தெரிந்தால். ஆனால் இவருக்கு வழங்கப்பட்ட எல் பிடபிள்யூ-ம் அம்பயர்-காலாகவே வந்தது.

மேலும் கடைசி பேட்டிங் ஜோடியாக ஜூரல் உடன் இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் இதே போல் அம்பயர்-காலில் எல்பிடபிள்யு தரப்பட்டது. இன்று இந்திய அணிக்கு அம்பயரின் இந்த மூன்று முடிவுகளும் பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. ஆனாலும் இந்திய அணியின் தரப்பில் எந்த விதமான விமர்சனங்களும் அம்பயரின் முடிவு மீது இல்லை.

இதுவே மூன்றாவது டெஸ்டில் இப்படியான இரண்டு முடிவுகள் அம்பயரிடம் வந்த பொழுது, அம்பயர்-கால் என்பதை இருக்கக் கூடாது என்று இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் விமர்சனம் செய்திருந்தார். ஆனால் இந்திய அணியோ விதிகளுக்கு உட்பட்டு அது குறித்து எதையுமே சொல்லவில்லை. எப்படியான ஆடுகளம் கிடைத்தாலும் எப்படியான முடிவுகள் கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு விளையாடுகிறது. ஆனால் எதிரணிகள் இப்படி இல்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்!

Published by
Tags: Ben Stokes