சென்னை அணிக்கு தீபக் சஹர் திரும்பும் வரை இந்த இளம் வீரர் அவருக்கு சரியான மாற்று வீரராக இருப்பார் – இர்பான் பதான் நம்பிக்கை

0
74
Deepak Chahar and Irfan Pathan

கடந்த மாதம் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் தீபக் சஹர் விளையாடினார். ஒரு போட்டியில் விளையாடிய ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அதேபோல 3 டி20 போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கடைசி போட்டியான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய போது அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

அதன் காரணமாகவே பாதியிலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். மருத்துவப் பரிசோதனை செய்து பார்க்கையில் அவருடைய கால் தசையில் சிறிய பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்று மருத்துவ குழு கூறியிருந்தது.

- Advertisement -

ஒரு சில போட்டிகளில் தீபக் சஹர் விளையாடமாட்டார்

கடந்த மாதம் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சஹர் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சென்னை அணிக்காக 2018 ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் மிக அற்புதமாக பந்துவீசி அசத்தினார். சென்னை அணிக்கு கடந்த 4 ஆண்டுகளில் இவர் 58 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியில் மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்படும் தீபக் சஹர் ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் அவர் சென்னை அணிக்கு திரும்புவார் என்றும் தெரிந்துள்ளது.

தீபக் சஹருக்கு இவர் சிறந்த மாற்று வீரராக இருப்பார்

மெகா ஏலத்தில் அண்டர் 19 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ராஜவர்தன் ஹங்கிரேக்கரை ஒரு கோடியே 50 லட்ச ரூபாய்க்கு சென்னை நிர்வாகம் கைப்பற்றியது. அண்டர் 19 உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக பந்துவீசி அதேசமயம் கீழ் வரிசையில் அற்புதமாக பேட்டிங்கையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தீபக் சஹர் சென்னை அணிக்கு திரும்பும் வரையில் ராஜவர்தன் அவருடைய இடத்தை சிறப்பாகப் பூர்த்தி செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜவரதன் வேறு ஏதேனும் ஒரு அணியில் போய் சேர்ந்திருந்தால் நான் வருத்தப்பட்டு இருப்பேன். ஆனால் தற்பொழுது அவர் தோனி தலைமையின் கீழ் உள்ள சென்னை அணிக்கு சென்றுள்ளார்.

இளம் வீரரை எவ்வாறு கையாள வேண்டும் என்று மகேந்திர சிங் தோனிக்கு நன்றாக தெரியும். எனவே அவரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நாம் உறுதியாக நம்பலாம். தீபக் சஹர் அணிக்கு திரும்பும் வரையில் ராஜவர்தன் விளையாடுவது தான் சரி என்று இர்பான் பதான் இறுதியாக கூறி முடித்தார்.