எப்படி சுப்மன் கில் இவ்வளவு சக்ஸசாக இருக்கிறார்? – கில் பற்றி அக்ஸர் பட்டேல் சொன்ன சீக்ரெட்!

0
81

சுப்மன் கில் பேட்டிங் குறித்து பேட்டியில் ஓபனாக கருத்து தெரிவித்திருக்கிறார் அக்ஸர் பட்டேல்.

சுப்மன் இந்திய இந்திய அணிக்கு துவக்க வீரராக புதிய பலம் சேர்த்திருக்கிறார் சுப்மன் கில். கேஎல் ராகுல், ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இல்லாத போது மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த தொடரில் இரண்டு அரை சதங்கள் உட்பட 205 ரன்கள் அடித்தார் கில். மேலும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஜிம்பாப்வே அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு கில் முதல் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கி அசத்தினார். 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் கில் 82 ரன்கள் அடித்திருந்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், கேஎல் ராகுல் துவக்க வீரராக களமிறங்க, கில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ஆனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய கில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 97 பந்துகளுக்கு 130 ரன்கள் அடித்திருந்த கில், 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசினார். மூன்று போட்டிகள் முடிவில் ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 245 ரன்கள் அடித்திருந்தார். மேலும் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை 9 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள கில், 499 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது சராசரி 70-க்கும் மேல் இருக்கிறது. இவரது ஸ்டிரைக் ரேட் 100க்கும் மேல் இருக்கிறது. நிச்சயம் டி20 உலக கோப்பை முடிந்த பிறகு, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை இந்திய அணியில் இவரது பெயர் இருக்கும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

கில் இந்திய அணியிலுள்ள வெகுசில வீரர்களுடன் மட்டுமே நெருக்கமாக பழகி வருகிறார். குறிப்பாக இஷான் கிஷன், ஆவேஷ் கான் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். எப்படி இவ்வளவு சிறப்பாக இவரது பேட்டிங் இருக்கிறது? என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் அக்சர் பட்டேல் விளக்கம் அளித்திருந்தார். அவர் கூறுகையில்,

“ஹோட்டல் அறையில் இஷான், கில் மற்றும் நான் நாங்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறோம். அவ்வபோது எங்களுடன் ஆவேஷ் கான் சேர்ந்து கொள்வார். நாங்கள் நான்கு பேரும் ஜோக் அடித்து சிரித்துக் கொண்டே இருப்போம். வேறு எதைப் பற்றியும் எங்களுக்குள் பேச்சு இருக்காது. கில் தான் அதிகமாக சிரித்து பேசிக் கொண்டிருப்பார்.”

“ஹோட்டல் அறையில் அவ்வாறு இருந்தால், மைதானத்தில் பேட்டிங் என்று வந்துவிட்டால், கில் வேறு மாதிரியான வீரராக மாறிவிடுகிறார். மிகவும் சீரியஸாக பேட்டிங் செய்கிறார். அவருடன் நான் சில போட்டிகளில் விளையாடும் போது கவனித்தேன். டாட் பந்துகளை விரும்பாத வீரராக இருக்கிறார். தொடர்ச்சியாக ஒரு ரன் அல்லது இரண்டு ரன்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார். இதுதான் அவருக்கு தொடர்ந்து ரன்களை குவிக்க உதவுகிறது. பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இல்லாமல், தொடர்ந்து இடைவிடாமல் ரன் எடுக்க வேண்டும் என்று நினைப்பதுதான் அவரது சக்சஸ்.”

“முதல் செஞ்சுரி வாழ்வில் மறக்க முடியாததாக இருக்கும். கில் அவரது திறமைக்கு இன்னும் பல சதங்கள் விலாஸ் வார் என்று நம்புகிறேன்.” என்று தனது பேட்டியில் அக்சர் பட்டேல் குறிப்பிட்டு இருந்தார்.