“இந்தியா தோற்றது இதனால்தான்.. தான் விரித்த வலையில் தானே விழுந்தது!” – அக்தர் முக்கியமான கருத்து!

0
9993
Akthar

இந்திய அணி நான்காவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று, கோப்பையை மூன்றாவது முறையாக வெல்லும் என்று இந்திய ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் அரை இறுதி என இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டிக்கு வந்தது.

- Advertisement -

இந்த இறுதி போட்டியை பொறுத்தவரை ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் என்கின்ற பொழுதே, ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கக்கூடியதாக டாஸ் அமைந்தது.

இந்த இடத்தில் மேலும் இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது ஆடுகளம். இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு வந்தால் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாகிவிடும் என்ற நிலைமை தான் இருந்தது.

ஆனால் ஆட்டத்தின் முதல் பகுதியில் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் சாதகமாக இல்லை. ஏனென்றால் ஆடுகளம் மெதுவாக இருந்தது. இதனால் இந்திய வீரர்களால் பவர் பிளே தாண்டி ரன்கள் எடுக்க முடியவில்லை. அதே சமயத்தில் இரண்டாம் பகுதியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்கள் எடுக்க எளிமையாக மாறியது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணி இப்படி பரிதாபமான முறையில் இயற்கையிடம் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக தோல்வியே அடையாமல் வந்த இந்திய அணி தோற்று உலகக் கோப்பையையும் இழந்தது. இதில் ஆடுகளம் குறித்து பாகிஸ்தான் அணியின் அக்தர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இந்தியா ஒரு சிறந்த விக்கெட்டை தயார் செய்து, விக்கெட் தொடர்பாக பயமுறுத்தும் அணுகுமுறையை கைவிட வேண்டும். ஆடுகளம் பவுன்ஸ் மற்றும் வேகத்தை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்தியா தங்கள் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதற்காக, ஆடுகளத்தை மெதுவாக அமைத்தார்கள். இந்த அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை.

ஆஸ்திரேலியா உலகக் கோப்பைகளை தொடர்ந்து வெல்வதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது. அதே சமயத்தில் இந்தியா அதிர்ஷ்டத்தால் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அவர்கள் தொடர்ந்து பத்து ஆட்டங்களை வென்று வந்திருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார். இறுதியாக இந்தியா தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்டது!