ஜிம்பாப்வேவுக்கு விளையாடும் இந்த பாகிஸ்தான் வீரரை வீழ்த்த இதுதான் வழி- முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் அறிவிப்பு!

0
931
Indvszim

சமீபத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று தீப்பெட்டி போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையுமே பங்களாதேஷ் அணி 2-1 என இழந்தது!

ஜிம்பாப்வே அணி தனது சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணியை 2 தொடரிலும் விழ்த்தி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் ஜிம்பாப்வே அணியில் பின் ஆல்ரவுண்டர் ஆன சிகந்தர் ராஸா ஆவார்!

- Advertisement -

இவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இருபத்தி ஆறு பந்துகளுக்கு 65 ரன்கள், 53 பந்துகளுக்கு 62 ரன்கள் என இரு அரைசதங்கள் அடித்தார். அதேபோல் ஒருநாள் தொடரில் 107 பந்துக்கு 135 ரன்கள், 127 பந்துகளுக்கு 117 ரன்கள் என இரண்டு சதங்களையும் விளாசினார். இதில்லாமல் தனது ஆப் ஸ்பின் சுழற்பந்து வீச்சில் சிலர் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஜிம்பாவே அணி தொடரை வெல்ல இதனால்தான் இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது இந்திய இளம் அணி கேஎல் ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக ஜிம்பாப்வேயின் ஹராரே நகருக்குச் சென்றுள்ள இந்திய அணி தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொடர் வருகின்ற 18, 20 22 தேதிகளில் நடக்கிறது.

நடக்கவுள்ள இந்தத் தொடரில் ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர அதிரடி வீரரான சிகந்தர் ராசா இந்தியப் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் டிர்க் வில்ஜோன் சில ஆலோசனைகளை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது ” சிக்கந்தர் ராஸா ஒரு தைரியமான பேட்ஸ்மேன் என்று நான் உணர்கிறேன். மேலும் அவர் எப்பொழுதும் ரன்களை எடுக்க ஆசைப்படுகிறார். இதனால் அவரை ரன் எடுக்க கஷ்டப்படுத்தினால் அவர் மீது அழுத்தமாக மாறி அவர் விக்கெட்டை பறிகொடுக்க கூடும். மேலும் அவர் தனது தோள்களில் மிகப் பெரிய சுமையை சுமக்கிறார். இது அவருக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும். இங்கு நாம் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் அவரைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறோம். அந்த அளவிற்கு ஜிம்பாவே மக்கள் அவரிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். அவர் ஜிம்பாப்வே ரசிகர்களின் முன்னிலையில் அவர் விளையாடுவது அவருக்குப் பெரிய அழுத்தத்தை உருவாக்கும். இதனால் அவரை எளிதாக வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்!

சிக்கந்தர் ராஸா தற்போது விளையாடுவது ஜிம்பாப்வே அணிகள் என்றாலும் அவரது சொந்த நாடு பாகிஸ்தான் ஆகும். அவர் பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் பிறந்தவர். தற்போது அவருக்கு 36 வயதாகிறது!