“நாங்க 428 ரன் அடிச்சதுக்கு காரணமே இதுதான்.. அது வரம்!” – டெம்பா பவுமா பேச்சு!

0
1423
Bavuma

உலகக் கோப்பை தொடர் என்றாலே தென் ஆப்பிரிக்க அணிக்கு எப்பொழுதும் ஆகாத ஒரு விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த முறை அது மாறுமா? என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எந்த ஒரு உலகக்கோப்பை தொடரையும் மிகச் சிறப்பாக ஆரம்பிப்பது, பின்பு நாக்அவுட் போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தோல்வி அடைந்து வெளியேறுவது என்பதை தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பையின் வரலாறாக வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தனது முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் குவித்து, 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வழக்கம் போல் மிகச் சிறப்பாக ஆரம்பித்து இருக்கிறது.

இந்த முறையும் மிகச் சிறப்பாக ஆரம்பித்து நாக்அவுட் போட்டியில் மிக மோசமாக தோற்று தென் ஆப்பிரிக்கா வெளியேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் பார்ம், நடப்பு உலகக் கோப்பையை மிகச் சுவாரசியமாக மாற்றும் என்பதில் மட்டும் சந்தேகம் கிடையாது.

அதே சமயத்தில் இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இரண்டும் பேட்டிங் அளவுக்கு சிறப்பாக இல்லை. பவர் பிளேவின் பாதி ஓவர் தாண்டியதும் இலங்கையின் குசால் மென்டிசை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அரை சதம் அடிக்க விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் “நாங்கள் வெற்றி பெற விரும்பினோம். அதைச் செய்திருக்கிறோம். இதற்கு மகிழ்ச்சி. ஒரு பேட்டராக தவறு கண்டுபிடிக்க எதுவும் இல்லை. ஆனால் பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எல்லாம் சிறப்பாக இருந்தது.

நாங்கள் டாசை இழந்தது எங்களுக்கு இந்த போட்டியில் ஒரு வரமாக அமைந்துவிட்டது. பவர் பிளேவுக்கு பிறகு பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. இங்கு சூழ்நிலைக்கு தகுந்தவாறு உடனே மாறிக் கொள்வது முக்கியம்.

நாங்கள் ஆடுகளத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று நினைத்தோம். ஒருவேளை நாம் இங்கு சீக்கிரம் நம்மை அட்ஜஸ்ட் செய்து கொள்ளாவிட்டால் கடினம். குசால் மெண்டிஸ் மிகச் சிறப்பாக எங்களை எதிர்த்து விளையாடினார். கேசவ் மகாராஜ் பந்தில் நன்றாக இருந்தார்.

எதிர்வரும் போட்டிகளுக்கு கூடுதல் சுழற் பந்துவீச்சாளரை அணியில் சேர்க்க வேண்டியதாக இருக்கலாம். இங்கிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. சவால்கள் புதிதாக மீண்டும் வரும்!” என்று கூறியிருக்கிறார்!