அயர்லாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் கடைசி ஓவரை உம்ரன் மாலிக் இடம் கொடுத்ததற்கு இதுதான் காரணம் – கேப்டன் ஹர்திக் பாண்டியா

0
131

இந்திய மட்டும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 104 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரும் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.

கடைசி ஓவரை உம்ரான் மாலிக் இடம் கொடுத்ததற்கு இதுதான் காரணம்

- Advertisement -

நேற்று ஆட்டத்தின் கடைசி ஓவரில் அயர்லாந்து அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது அப்போது கடைசி ஓவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா மாலிக்கிடம் கொடுத்தார். மூன்று ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி முப்பத்தி ஒரு ரன்கள் எடுத்த நிலையில் அவர் 4-வது ஓவரில் பந்து வீச வந்தார்.

ஒரு நோ பால் மற்றும் 2 பவுண்டரி அடுத்தடுத்து செல்ல இந்திய அணி தோல்வி அடைந்துவிடும் என்று ரசிகர்கள் பயந்தனர் ஆனால் சுதாரித்துக் கொண்ட மாலிக் கடைசி மூன்று பந்துகளை சிறப்பாக வீசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை ஏன் உம்ரான் மாலிக்கிடம் கொடுத்தேன் என்று விளக்கம் அளித்தார். “எனது மனதில் உள்ள பயத்தையும் குழப்பத்தையும் முதலில் தவிர்த்தேன். நிதானமாக அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி கடைசி உரை அவரது கொடுத்தால் அவரது வேகத்திற்கு நிச்சயமாக 17 ரன்கள் அடிப்பது என்பது கடினமான விஷயம்.

- Advertisement -

எனவே தான் அந்த முடிவை எடுத்தேன் அவரும் இறுதியில் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். மேலும் சிறப்பாக விளையாடிய தீபக் மற்றும் தினேஷ் கார்த்திக்கு என்னுடைய பாராட்டுக்கள். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி அவர்களது கரகோசம் மற்றும் ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தியது.

கேப்டனாக முதல் முதலில் இந்திய அணியை வழிநடத்தி வெற்றி கண்டது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது என்றும், இதே போல இனி வரும் நாட்களிலும் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விதத்தில் எங்களது பங்களிப்பு இருக்குமென்றும் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.