“நான் நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்.. ஆனால் அது பற்றி யோசிப்பதில்லை” – உண்மையை வெளியிட்டு அபினவ் முகுந்த் மனம் திறந்த பேச்சு!

0
2050
Abinav

உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பான புள்ளி விவரங்களை கொண்டிருக்கக் கூடியவர் இடதுகை பேட்ஸ்மேன் அபினவ் முகுந்த். தற்போது இவர் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டு வருகிறார்.

இவரது திறமைக்கான வாய்ப்பு இந்திய அணியில் தரப்படவில்லை என்று இன்று அளவிலும் பரவலான கருத்து பலரிடம் இருக்கிறது. ஆனால் அதுகுறித்து அபினவ் முகுந்த் எந்த ஒரு இடத்திலும் பெரிதாக பேசியது கிடையாது.

- Advertisement -

கிரிக்கெட் வர்ணனையில் யாராவது இது குறித்து பேசினாலும் கூட அவர் பெரிய அளவில் அந்த பேச்சை நீட்டிக்காமல் துண்டித்து விட்டு, நடந்து கொண்டிருக்கும் போட்டியை பற்றி மட்டுமே பேசுவார்.

இந்த நிலையில் தற்போது தனக்கு எதனால் வாய்ப்பு தரப்படாமல் போனது, அதே சமயத்தில் அந்த நேரத்தில் தான் எப்படி விளையாடினேன், மேலும் அந்த நேரத்தில் ஒரு பயிற்சி ஆட்டத்தில் அவர் சதம் அடித்தும் கூட பின்பு அவர் அணிக்கு அழைக்கப்படாதது என நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
“நான் அணிக்கு அழைக்கப்படாததற்குப் பின்பு அது குறித்து யோசிக்க எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. நான் ஒரு போட்டியில் 49 ரண்களும், லார்ட்சில் பூஜ்ஜியமும் ஒரு மூன்று ரன்னும் எடுத்தேன். நான் இன்னும் கொஞ்சம் அதிகம் ரன் எடுத்திருக்க வேண்டும் அதனால்தான் நான் நீக்கப்பட்டேன் என்று நினைத்தேன்.

- Advertisement -

அந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்பாக ஒரு பயிற்சி போட்டி இருந்தது. நாட்டிங்கம்சையர் அணிக்கு எதிரான அந்த பயிற்சி போட்டியில் நான் சதம் அடித்திருந்தேன். ஆனால் இது பல பேருக்கு தெரியாது.

இப்படி இருந்தும் நான் அதற்குப் பிறகு அந்தத் தொடரில் நீடிக்கவில்லை. மேலும் எனக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலும் அதற்கு அடுத்து உள்நாட்டில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அழைப்பு வரவில்லை.

நான் இங்கிலாந்துக்கு செல்லும் முன்பாக மூன்று அல்லது நான்கு மாதங்கள் எந்த போட்டியும் விளையாடவில்லை. இதனால் எனக்கு நிலைமைகள் சிரமமாக இருந்தது. நான் அங்கு போய் இறங்கிய மூன்றாவது நாளே ஒரு டெஸ்ட் போட்டி விளையாட வேண்டிய கட்டாயத்திலிருந்தேன். நான் திடீரென அழைக்கப்பட்டிருந்தேன்.

நான் அதற்கு முன்பு இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் டியூக் பந்தில் விளையாடியது இல்லை. ஆஸ்திரேலியாவில் சில முறை கூக்கபுரா பந்தில் விளையாடி இருக்கிறேன். இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் என்னை எப்படியும் வெளிப்படுத்த முயன்றேன். நான் கடினமான நேரத்தில் சில ரன்களையும் எடுத்தேன். அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு நான் நேரடியாக அழைக்கப்பட்டிருந்தேன் என்பது முக்கியமானது. எல்லாம் முடிந்து விட்டது இனி பேசுவதால் எதுவும் இல்லை!” என்று கூறியிருக்கிறார்!