அடுத்த தோனியும் யுவராஜ் சிங்கும் இவன்தான்.. வாய்ப்பு மட்டும் கொடுங்க.. ஹர்திக் பாண்டியா குரு இந்திய முன்னாள் வீரர் அதிரடி கருத்து!

0
3685
Dhoni

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அந்த அணியின் மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு மூன்று என இழந்தது!

இந்த நிலையில் ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா உட்பட பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அயர்லாந்து மண்ணில் நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு காயத்தில் இருந்து திரும்பி வந்த ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அணியில் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் முதல் வாய்ப்பை பெற்று விளையாடியிருக்கிறார்கள். மேலும் இந்திய அணிக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு சிவம் துபே திரும்பி வந்திருக்கிறார். மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் இடம் பெற்று இருக்கிறார்.

நேற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்றது. இந்தப் போட்டியில் மழையின் குறுக்கீட்டின் காரணமாக இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்று தற்போது தொடரில் முன்னிலை வகிக்கிறது.

சிறுவயதில் ஹர்திக் பாண்டியாவை கிரிக்கெட்டராக கண்டுபிடித்தவரும், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பருமான கிரண் மோரே கூறும் பொழுது “நான் இந்திய அணியில் ரிங்கு சிங்க் வாய்ப்புக்காக காத்திருந்தேன். அவர் பேட்டிங் வரிசையில் ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர். மேலும் அவரால் சிறந்த ஃபினிஷர் ஆகவும் இருக்க முடியும். நாம் அனைவரும் எம்.எஸ்.தோனி மற்றும் யுவராஜ் சிங்கை பார்த்து இருக்கிறோம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் நம்மிடம் இல்லை.

- Advertisement -

நாம் அத்தகைய வீரர்களை உருவாக்க முயற்சி செய்தோம். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. திலக் வர்மாவும் இருக்கிறார் அவராலும் அந்த ரோலை செய்ய முடியும். ரிங்கு சிங் மேலும் ஒரு சிறந்த பீல்டர். அவரை நான் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் முன்னேறி உள்ளதாக நான் உணர்கிறேன்.

ஹர்திக் பாண்டியா தன்னை ஒரு பேட்டராக உயர்த்தி மேலே வந்து விளையாடுகிறார். எனவே நமக்கு கீழ் வரிசையில் ஆட்டத்தை முடிக்க கூடிய ஒருவர் தேவைப்படுகிறது. இங்கு அக்சர் படேலை வைத்து சிந்திக்கிறார்கள். ஆனால் அந்த வேலைக்கு மிகச் சரியான வீரர் ரிங்கு சிங்குதான்!” என்று உறுதியாக கூறியிருக்கிறார்!