“ரிங்கு சிங்கின் வாழ்க்கையை மாற்றியது இவர்தான்.. தெரியாத கதை இது” – தினேஷ் கார்த்திக் பகிர்ந்த உருக்கமான விஷயம்!

0
4563
Rinku

இந்திய கிரிக்கெட்டில் வெள்ளைப்பந்து வடிவத்தில் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர் ரிங்கு சிங் கவனம் இருப்பவராக இருந்து வருகிறார்.

ரிங்கு சிங் போட்டியை முடிக்கும் கடைசிக்கட்டத்தில் களம் இறங்கி, வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து வைப்பதில் மிகவும் சிறப்பான முதிற்சியைக் காட்டுகிறார். அவர் களத்தில் கொண்டிருக்கும் அமைதி மிகச் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

மிகவும் வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து படிப்படியாக முன்னேறி என்று இந்திய அணிக்கு வந்திருக்கிறார்.

கொல்கத்தா அணியில் அவர் இறந்த பொழுது, அதில் துணைப் பயிற்சியாளராக பணியாற்றிய இந்திய வீரர் அபிஷேக் நாயர், ரிங்கு சிங் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைத்தார் என்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த பொழுது 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கூட்டாண்மை இது. நாயர் எப்பொழுதுமே ரிங்குவின் திறமையை பார்த்தார். அவர் ரிங்கு குறித்து என்னிடம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் சாதிப்பதற்கு இன்னும் கொஞ்ச நேரம் மட்டுமே இருந்தது.

- Advertisement -

அலிகாரில் இருந்து வந்த அவருக்கு சிந்திப்பதற்கு பெரிய விஷயங்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இதைத்தான் அபிஷேக் நாயர் அவருக்கு செய்தார். மேலும் கடைசிக்கட்ட ஓவர்களில் ரிங்கு சிங் எப்படி தாக்கி விளையாடுவது என்று தன்னை சரியாக மாற்றிக்கொண்டார்.

அவருக்கு காயம் ஏற்பட்ட போதும் கூட, கொல்கத்தா அணி நிர்வாகி வெங்கி மைசூர் ஐயாவை சமாதானம் செய்து ரிங்கு சிங்கை தொடர்ந்து அணியில் பயணம் செய்ய வைத்தார். மேலும் ரிங்கு சிங் அபிஷேக் நாயர் வீட்டில் தங்கி இருந்து ஐபிஎல் தொடருக்கு தயாரானார். பின்பு உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடி, அபிஷேக் நாயர் விரும்பியதை போல கொல்கத்தா அணிக்கு மேட்ச் வின்னிங் பினிஷராக வந்தார்.

இன்று இந்த புகைப்படத்தை நான் பார்க்கும் பொழுது அபிஷேக் நாயர் ஒரு பயிற்சியாளராக வளர்ந்து விட்டதாக நான் உணர்கிறேன். மேலும் அவர் ரிங்கு சிங்குடன் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சியை உலகுக்கும் அறிவிக்க முடியும்.

உங்கள் மாணவர்களில் ஒருவர் உலக அரங்கில் மிகச் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது, ஒரு அதிசயமான உணர்வாக இருக்க வேண்டும். மேலும் அதை ஒளிபரப்பில் நேரலையாக பார்க்கவும், அந்த தருணத்தை நேரில் அனுபவிக்கவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!