“இது டெஸ்ட் டீமே இது கிடையாது.. விராட் கோலி வர வரைக்கும் தாங்குமா?” – கைஃப் அதிரடி விமர்சனம்

0
361
Kaif

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் முதலில் இடம்பெற்று இருந்த விராட் கோலி அதற்குப் பிறகு தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக அணியை விட்டு வெளியேறினார்.

இதனால் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் பாதிக்கப்படும் என்று அப்போது யாரும் நினைக்கவில்லை. மேற்கொண்டு முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்து விராட் கோலி இல்லாத குறையை நிவர்த்தி செய்தது.

- Advertisement -

ஆனால் ஆடுவதற்கு கொஞ்சம் சவால் தரக்கூடிய நான்காவது நாளில் இந்திய பேட்டிங் யூனிட் மிக மோசமாக செயல்பட்டது. 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

மேலும் கேப்டனாகவும் ரோகித் சர்மா களவியூகத்தில் மிகவும் மந்தமாகவே இருந்தார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் போப் 196 ரன்கள் அடிப்பதற்கு இந்திய அணி அனுமதித்தது.

மேலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அறிமுக சுழற் பந்துவீச்சாளர் இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இப்படி திடீரென இரண்டு நாட்களில் இந்திய அணி மொத்தமாக மோசமாக விளையாடி ஆட்டத்தை தோற்றது.

- Advertisement -

விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்பும் வேளையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக மாறி இருக்கிறது. இரண்டாவது போட்டியை தோற்றால் இந்திய அணி தொடரை வெல்வது பெரிய கடினம் ஆகிவிடும். மேலும் தொடரை இழப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

இதுகுறித்து பேசி உள்ள முகமது கைஃப் கூறும் பொழுது ” இந்த நேரத்தில் இந்திய அணி தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் அணியை வைத்து டெஸ்ட் தொடரை விளையாடுகிறது என்று நான் நினைக்கிறேன். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருப்பவர்கள்.

இவர்கள் அனைவருமே ஸ்ட்ரோக் மேக்கர்கள். இதில் கில்லின் தற்காப்பு பேட்டிங் சரியாக இல்லை. எனவே அவர் இந்த விஷயத்தில் நல்ல பவுலிங் ஸ்பெல்லுக்கு எதிராக தன்னை சரி செய்து கொள்ள வேண்டும். மேலும் ஸ்ரேயாஸ் ஐயரும் இப்படியானவரே.

விராட் கோலி வரும் வரையில் இவர்கள் சரியாக மாட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. துருவ் ஜுரல் மற்றும் தற்போதைய பேட்டிங் பார்மில் நாம் சர்ப்ராஸ் கானை கூட இந்திய அணியில் பார்க்க முடியும்.

இதையும் படிங்க : “கோலியும் இல்ல.. வயசு 37 ஆச்சு.. ரெண்டே சதம்தான்” – ரோகித் சர்மாவை ஆஸி லெஜன்ட் விமர்சனம்

ஆனால் ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. எனவே இதற்காக அக்சர் படேல் எட்டாவது இடத்திலும் வாஷிங்டன் சுந்தர் ஒன்பதாவது இடத்திலும் விளையாடும் படி யோசித்து இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.