இது பழைய பும்ரா கிடையாது.. அவர் பவுலிங்ல இதை கவனிச்சிங்களா? – மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆச்சரியமான தகவல்!

0
7073
Bumrah

அயர்லாந்து நாட்டிற்கு தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி நேற்று மழையின் ஆபத்துக்கு இடையே நடைபெற்றது. இந்திய அணி
யின் கேப்டன் பும்ரா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தன் முடிவை நியாயப்படுத்தும் விதமாக அவர் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

ஆனாலும் எட்டாவது விக்கெட்டுக்கு வந்த மெக்கார்தி சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுக்க ஏழு விக்கெட் இழப்புக்கு அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் சேர்த்தது. இந்திய கேப்டன் பும்ரா பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஏழாவது ஓவரில் திடீரென அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த பொழுது மழை குறுக்கிட்டது. அந்த நேரத்தில் இந்திய அணிக்கு தேவைப்பட்ட ரன்களை விட இரண்டு ரன்கள் அதிகமாக இருந்தது. எனவே தொடர்ந்து மழை பெய்ய இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான, தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் பற்றி கூறும் பொழுது
“பும்ரா திரும்பி வந்ததை பார்ப்பதில் மகிழ்ச்சி. எல்லா சிலிண்டர்களும் எரிந்தது. நீங்கள் பார்த்தது சிறந்த பும்ராவை கிடையாது. ஆனால் அவர் எல்லா வேரியேஷன்களும் பந்துவீச்சில் வெளிப்படுத்தினார். அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டதை நீங்கள் பார்த்தீர்கள். அவருக்கு ரிதம் கிடைத்தது. அவர் தனது பந்துவீச்சில் ஸ்லோ ஆப் கட்டர், கடினமான லென்த் மற்றும் யார்க்கர் என எல்லாமே வீசினார்.

- Advertisement -

நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். பவுலிங் வீசுவதற்கான அவரது ரன் ஆப் கொஞ்சம் நீண்டதாக இருந்தது. ஆனால் அவர் பந்து வீச ஓடிவந்த பொழுது அவரது வேகம் நன்றாக இருந்தது. அவர் நல்ல ரிதத்தில் இருந்தார் என்று தெரிந்தது. அவர் இன்னும் விளையாடும் பொழுது அவரது வேகம் அதிகரிக்கும். போட்டியில் பும்ரா பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் செயல்பட்டது சிறப்பாக இருந்தது எனக்கு இதில் மகிழ்ச்சி!” என்று கூறி இருக்கிறார்!