“இது என்னோட டீம் கிடையாது.. என் வேலை இதுவரைக்கும்தான்!” – ராகுல் டிராவிட் ஓபன் ஸ்பீச்!

0
494
Dravid

இந்திய கிரிக்கெட்டில் பெரிய சூறாவளி அடித்த ஆண்டு 2007 ஆம் ஆண்டு. அந்த ஆண்டு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் தோற்று முதல் சுற்றோடு வெளியேறியது!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசி இருந்த வீரேந்திர சேவாக், அந்த உலகக் கோப்பை அணிதான் இந்திய உலகக் கோப்பை அணிகளில் சிறந்த அணி என்று கூறியிருந்தார். அப்படிப்பட்ட ஒரு அணி தோற்று வெளியேறியதை யாராலும் இன்றளவும் நம்ப முடியவில்லை.

- Advertisement -

அந்த உலகக் கோப்பைக்கு இந்திய அணியை வழிநடத்தியவர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட். சச்சினை துவக்க ஆட்டக்காரராக இருந்து கீழே கொண்டு வந்தது, மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு கொடுத்து சாய்த்து விட்டது.

தற்பொழுது 16 ஆண்டுகள் கழித்து 2007 உலகக்கோப்பை தோல்விக்கு மருந்தை தேடும் வாய்ப்பு கேப்டனாக இருந்து பயிற்சியாளராக மாறி உள்ள ராகுல் டிராவிட்டுக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பில் ராகுல் டிராவிட் ரோகித் சர்மா கூட்டணி எப்படி செயல்படும்? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் தனக்கு கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட வலி, மேலும் வீரர் கேப்டன் என்பதிலிருந்து பயிற்சியாளராக தான் மாறியது எப்படி? என்பதெல்லாம் குறித்து மனம் திறந்து ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“நான் ஒரு வீரராக இருந்து பல நாட்கள் ஆகிறது. உங்களிடம் ஒரு உண்மையை சொல்வது என்றால் நான் எப்பொழுதோ கிட்டத்தட்ட ஒரு வீரர் என்பதையே மறந்து விட்டேன். நான் அதிலிருந்து நகர்ந்தேன். நான் என்னை வீரராக நினைக்கவில்லை. ஒருவேளை அதுதான் மைண்ட் ஸ்பேஸ் வித்தியாசம். அணிக்கு என்னால் இயன்றதைச் செய்ய உதவுவதில் கவனம் செலுத்துகிறேன்.

நேர்மையாக ஆட்டம் தொடங்கியதும் அது கேப்டனின் அணி. அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். அதை அவர்கள்தான் செய்ய வேண்டும். ஒரு பயிற்சியாளராக நான் என் வேலையைப் பார்க்கிறேன்.

இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக இறுதியாக எங்களுக்கான ஒரு அணியை பெற முயற்சி செய்தோம். அணியைக் கட்டி எழுப்பினோம். அணியைக் கட்டி எழுப்பிய பிறகு வீரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரத்தை கொடுக்க வேண்டும். இதைத்தான் செய்திருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -