“இது இந்தியா.. பாகிஸ்தான் கிடையாது.. வேற திட்டத்தோட வாங்க” – இங்கிலாந்துக்கு ஓஜா அறிவுரை

0
61
Ojha

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்தது.

இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மூன்று போற்றுகளையும் வென்று பாகிஸ்தானை சொந்த மண்ணில் வொயிட் வாஷ் செய்தது.

- Advertisement -

இந்த தொடர் முழுக்க இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னொரு சுவாரசியமான வண்ணத்தை கொடுத்தது. இங்கிலாந்தின் இளம் வீரர் ஹாரி புரூக் சதங்களாக குவித்தார்.

ஆசிய மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற வெற்றி, இந்தியாவுக்கு எதிராக விளையாட இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளிப்பதாக நிச்சயம் இருக்கும். இங்கிலாந்து முகாம்களில் இருந்து இப்படியான பேச்சுகள் வருகிறது.

எனவே இங்கிலாந்து பாகிஸ்தானில் என்ன மாதிரியான பேட்டிங் அணுகுமுறையைக் கொண்டிருந்ததோ, அதே அதிரடியான அணுகுமுறையையே இந்தியாவிலும் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்யும் என்று, இந்திய முன்னாள் சிலர் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா நம்புகிறார். ஆனாலும் அவர்களுக்கு ஒரு மாற்றுத்திட்டம் வேண்டும் எனவும் நினைக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஓஜா கூறும் பொழுது “பாகிஸ்தானில் அவர்கள் பாஸ்பால் அணுகுமுறையில் விளையாடி வெற்றி பெற்றது, இங்கிலாந்தின் நம்பிக்கையை மிகவும் அதிகரித்திருக்கும். ஆனால் பாகிஸ்தானில் இருந்த ஆடுகள நிலைமை வேறு. அங்கு போல இங்கு வேகமாக ஆடுகளம் இருக்காது. மேலும் அங்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்கள் இருந்தன. எனவே இந்தியாவில் அதே முறையில் விளையாட முடியாது. எனவே அவர்களுக்கு இன்னொரு திட்டம் இருக்க வேண்டும்.

பாஸ்பால் என்பது பயம் இல்லாத கிரிக்கெட்டை விளையாடுவது. இந்த முறையில் விளையாடுவதின் மூலம் எதிரணியை உளவியல் ரீதியாக பின்னே தள்ளி இங்கிலாந்து முன்னேற முயற்சி செய்யும். ஆனால் இந்தியாவில் இதை செய்வது கடினம். ஏனென்றால் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை அதிரடியாக விளையாடுவது முடியாத காரியம்” என்று கூறியிருக்கிறார்.