நாளைய போட்டியில் இந்திய அணி இப்படித்தான் களமிறங்கும் – இந்திய அணியின் முன்னாள் வீரர் கணிப்பு!

0
351
Ind vs zim

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் துவங்கும் டி20 வடிவிலான ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க சென்றுள்ளது. தொடருக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். இந்திய அணிக்கு விராட்கோலி மீண்டும் திரும்பி வருகிறார். இந்த தொடர் இருபத்தி ஏழாம் தேதி துவங்க இருக்க அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை இருபத்தி எட்டாம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது!

இதற்கு நடுவில் இளம் வீரர்களை கொண்ட ஒரு அணி கே எல் ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் துவங்குகிறது!

- Advertisement -

இந்தத் தொடருக்கு முதலில் ஷிகர் தவான் தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து ஆனால் அதற்குப் பிறகு கோவிட் தோற்றால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி, தற்போது மீண்டும் இந்திய அணிக்குள் திடீரென கேஎல் ராகுல் ஜிம்பாப்வே தொடருக்காக சேர்க்கப்பட்டார். அதோடு அவர் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்த இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களுக்கான இடத்தில் கேஎல் ராகுல் ஷிகர் தவான் தவிர்த்து, ருதுராஜ், இசான் கிசான், சுப்மன் கில் ஆகிய மூன்று வீரர்கள் இருக்கிறார்கள். இதில் சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி நாயகன் விருதை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய அணிக்குள் துவக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் வந்திருப்பது சுப்மன் இடத்தை கேள்விக்குறியாக்குகிறது. துவக்க ஆட்டக்காரர்களாக யார் வருவார்கள் என்ற சந்தேகம் நீடிக்கிறது. கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள கே எல் ராகுல் பயிற்சியின் பொருட்டு துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்படலாம்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வால்தாட்டி கருத்து தெரிவித்துள்ளார் ” கேஎல் ராகுல் மீண்டும் களமிறங்குகிறார். அவர் உடல் தகுதியுடன் இருந்தால் அவர்தான் கேப்டன் என்பது தெரிந்த விஷயம். அவர் ஷிகர் தவான் உடன் இணைந்து இன்னிங்சை துவங்குவார் என்று தெரிகிறது. அணி நிர்வாகம் இந்த இடது மற்றும் வலது கை ஜோடியை விரும்பும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவர் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க மாட்டார் என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங்கில் நம்பர் 3 பொசிசனில் இறங்குவார்” என்று தெரிவித்துள்ளார்!