“இந்திய அணி கோட்டை விட்டது இப்படித்தான்” – தவறுகளை புட்டு புட்டு வைத்த ரவி சாஸ்திரி!

0
1441
Ravi

உலக டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து இருந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்துவீசிய இந்திய அணி 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதற்கு மேல் விக்கட்டை வீழ்த்தாததோடு 251 ரன்கள் விட்டுத் தந்து போட்டியில் மிகவும் பின்தங்கி நிற்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் டிராவீஸ் ஹெட் 156 பந்தில் 146 ரன்கள் குவித்து களத்தில் நிற்கிறார். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித் 95 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்.

இதனால் இன்றைய நாள் ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே இன்று நேற்றைய தவறுகளை திருத்திக்கொண்டு இந்திய பந்துவீச்சாளர்கள் வருகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி செய்த தவறுகள் என்னவென்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” நீங்கள் ஒரு முறை அணியைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள், அஸ்வினை அணிக்குள் கொண்டு வந்தீர்களா இல்லையா என்பதை எல்லாம் இரண்டாவது. ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் தந்திரோபாயமாகச் சரியாகச் செயல்பட்டு இருக்க வேண்டும்.

- Advertisement -

முதல் செஷனில் சமி மற்றும் சிராஜ் இருவரும் தங்களது இரண்டாவது ஸ்பெல்லை வீசி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருவருக்கும் நீண்ட ஸ்பெல்களை கொடுத்தார்கள். மூன்று அல்லது நான்கு மாதங்களாக முதல் தர கிரிக்கெட்டில் யாரும் விளையாடவில்லை. நாள் முழுவதும் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். சூரியன் வெளியே வந்து பேட்டிங் செய்ய எளிமையாகும் பொழுது இவர்கள் இருவரும் திரும்ப பந்து வீச வருவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும்.

எனவே எனது கருத்துப்படி இவர்கள் இருவருக்கும் முதலில் குறைவான ஓவர்கள் கொடுத்து முதல் செசனில் இரண்டாவது ஸ்பெல் தந்திருக்க வேண்டும். இவர்கள் இருவரும் முதல் செஷனில் 70 சதவீதம் பந்துவீசி இருக்க வேண்டும்.

இவையெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள். விளையாடுவதற்கு விக்கெட் நன்றாக ஆன பிறகு இவர்களுக்கு மூன்று அல்லது நான்கு ஓவர் சின்ன சின்ன ஸ்பெல்களை கொடுத்து இருக்கலாம். இரண்டாவது செஷனில் ஜடேஜாவை அதிகம் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் இந்திய அணி ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணியை நகர்த்த அனுமதித்து விட்டது. குறிப்பாக ஹெட் தன்னுடைய தாக்குதல் பாணி ஆட்டத்தில் மாற்றிவிட்டார்!” என்று கூறியிருக்கிறார்!