கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்த இந்திய வீரரின் பேட்டிங்கை மைதானத்தில் இந்த திசையில் இருந்து பார்க்க வேண்டும் ; க்ரீம் ஸ்வான் புகழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணிக்கு சைக்கிள் பெடல் மாதிரி, ஆரம்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகவும், ஆரம்பத்தில் பிரச்சனையாக இல்லாத விஷயங்கள் பிரச்சனையாகவும் மாற ஆரம்பித்திருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலை தங்கள் அணிக்கு வரும் என்று இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நினைத்து இருக்க வாய்ப்பு குறைவு!

- Advertisement -

கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பொறுப்பேற்கும் பொழுது, இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை தைரியமாக அணுகாமல் இருந்ததுதான். முதலில் பேட் செய்யும் பொழுது அவர்களிடம் இருந்து ஒரு நல்ல ஸ்கோர் வருவதில்லை.

இதில் கவனம் செலுத்திய ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் மனரீதியான வீரர்களின் இந்தப் பிரச்சனையைச் சரி செய்து, இந்திய வெள்ளைப் பந்து போட்டியில், இந்திய அணியின் பவர் பிளே ஸ்கோர் மற்றும் மொத்த இலக்கை அதிகமாக்கினார். பந்துவீச்சை பற்றி பெரிதாக கவலைப்பட ஒன்றும் இல்லாமல் இருந்தது. இந்த சமயத்தில் பேட்டிங்கில் விராட் கோலி தனது ஃபார்மை தொலைத்து இருந்தார்.

இவருக்கும் ஒரு ஓய்வு கொடுக்கப்பட்டு மீண்டும் ஆசிய கோப்பைக்கு வந்த இவர் இரண்டு அரை சதங்கள் மற்றும் கடைசி ஆப்கானிஸ்தான் அணியுடன் போட்டியில் சதம் அடித்து பேட்டிங் பார்முக்கு திரும்பினார். எல்லாம் சரியான பொழுது, தற்பொழுது இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் காயமும், இறுதிக்கட்ட ஓவர்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் விட்டு தரும் ரன்களும் இந்திய அணியை கவலைப்பட வைத்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி விராட்கோலி பேட்டிங்கில் நல்ல நிலைக்கு வந்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய நல்ல விஷயம் என்று உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விராட் கோலியின் பேட்டிங் பற்றி அவர் நல்ல முறையில் ஆட வேண்டிய தேவை பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் சில முக்கியமான கருத்துக்களை கூறியதோடு, விராட் கோலியின் பேட்டிங் திறன் பற்றி வியந்து புகழ்ந்து கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கிரீம் ஸ்வான் கூறும்பொழுது ” இந்தியாவுக்கு விராட்கோலி தேவை. நான் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளேன். இந்திய அணிக்கு அப்பொழுது தோனி சிறப்பாக விளையாடுவது தேவையாக இருந்தது போல், விராட் கோலியும் சிறப்பாக விளையாடுவது மிக அவசியமானது. இந்த வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், மக்கள் ஏமாற்றம் அடைவதால், தொலைக்காட்சி மதிப்பீடுகள் குறைய ஆரம்பிக்கும். மேலும் நான் விராட் கோலி நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவுடன் நான் விளையாடும் பொழுது விராட் கோலி பேட்டிங்கை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. மேலும் நான் அவரது பேட்டிங்கை அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். நீங்கள் விராட் கோலியின் பேட்டிங்கை மைதானத்தில் பீல்டிங்கில் இருந்தோ, ஸ்டாண்டிலிருந்தோ பார்ப்பதாக இருந்தால், பேக்வேர்ட் பாயிண்ட் அல்லது கவர் திசையில் இருந்து பார்க்க வேண்டும். அவரது பேட்டிங் அவ்வளவு அழகாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” விராட் கோலி நன்றாக வருவார் என்று நான் நம்புகிறேன். அவர் 2, 3 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்தது நம்ப முடியாத ஒன்று. ஏனெனில் அந்த வீரர் அற்புதமானவர். அவர் சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று” என்று கூறியுள்ளார்!

Published by