ஐபிஎல் 2024

வெறும் ஒரு மேட்ச்.. கழட்டி விடப்பட்ட 5 நட்சத்திர வீரர்கள்.. ஐபிஎல் 2024-ல் சோகம்

2024ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 46 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் கிட்டத்தட்ட முதல் பாதி முடிந்து விட்டது. இந்த ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை எதிர்பார்த்த சம்பவங்களும், எதிர்பாராத சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

தற்போதுள்ள சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர் தோல்விகளால் 99 சதவீதம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு இழந்து விட்டது. இந்தத் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு மறக்க முடியாத தொடராக இருந்தாலும், பந்துவீச்சாளர்களுக்கு ஒரு கசப்பான அனுபவம் நிகழ்ந்து உள்ளது. இந்த நிலையில் முதல் போட்டிக்கு பிறகு வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் பற்றி காண்போம்.

1.ஷமர் ஜோசப்: வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் சமர் ஜோசப் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் உலகப் புகழ் பெற்றார். இதன் மூலம் ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைத்து லக்னோ அணியால் எடுக்கப்பட்ட இவர், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி 47 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாததால் அந்தப் போட்டிக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2.ஜே ரிச்சர்ட்சன்: ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ரிச்சட்சன் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடினார். தனது அறிமுகப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு பெற்ற இவர் நான்கு ஓர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 40 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் அந்த போட்டிக்குப் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

3.மார்கோ யான்சன்: தென்னாப்பிரிக்க அணியைச் சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளரான மார்க்கோ ஜான்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர் 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி 40 ரன்களை விட்டுக் கொடுத்ததால் அதற்குப் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது பெஞ்சில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார்.

  1. 4.மேத்யூ வேட்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில சீசன்களாகவே ஃபார்ம் இன்றி தவித்து வந்த இவர், இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். அப்போட்டியில் இவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

5.அதர்வா டைடே: சர்வதேச அணியில் விளையாடாத அதர்வா டைடே கடந்த காலங்களில் பஞ்சாப் அணிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தவர். இருப்பினும் இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by