“இந்த இந்திய வீரரால் ஒரு ஆட்டத்தை எந்த சூழ்நிலையில் இருந்தும் வெல்ல முடியும்” – ரிக்கி பாண்டிங் புகழ்ச்சி!

0
1367
Ricky ponting

ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாடி உள்ள 4 டி-20 தொடர்களில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததோடு, சில வீரர்களின் இடங்களைப் பேட்டிங்கில் மாற்றி பரிசோதனைகளையும் செய்தது. எந்த ஒரு வீரர் அணியில் இல்லாமல் போனாலும் அவருக்கு பதிலாக ஒரு மாற்று வீரரை தயாராகவே இந்திய அணி நிர்வாகம் உருவாக்கி வைத்திருக்கிறது.

தற்போது ஆசிய கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். ஆனாலும் அணியின் நம்பர் 1 பவுலர் விலகினாலும், அவரது இடத்தை நிரப்ப ஒரு இளைய வீரரை இந்திய அணி நிர்வாகம் கண்டுபிடித்து இருக்கிறது. அவர் பஞ்சாபை சேர்ந்த 22 வயதான அர்ஸ்தீப் சிங்!

- Advertisement -

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் ஓடு தோற்று முதல் சுற்றோடு தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது இந்திய அணி நிர்வாகத்தின் மீது மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கி விட்டது.

இதனால் இந்திய அணி நிர்வாகம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 தொடர் இது மிக கவனமாக எச்சரிக்கையாக தயாராகிக்கொண்டிருக்கிறது. இது செய்யப்பட்ட பரிசோதனை முயற்சிகளில் மிக முக்கியமான பரிசோதனை முயற்சி பேட்டிங்கில் 4ஆம் இடத்தில் விளையாடி வந்த சூரியகுமார் யாதவை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கியது தான். அவர் முதல் இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ் உடனான டி20 தொடரில் பெரிய தாக்கத்தை உருவாக்க விட்டாலும், அதிரடியான தாக்குதல் மனப்பான்மையோடு ஆட்டத்தை தொடங்கினார். மேலும் மூன்றாவது ஆட்டத்திலும் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்ட அவர் மிகப் பிரமாதமான அரைசதம் ஒன்றை பெரிய ஸ்டிரைக் ரேட்டில் அடித்தார்.

சூரியகுமார் யாதவ் எதிரில் யார் பந்து வீசுகிறார்கள் எந்த மாதிரி பந்துவீச்சு என்றெல்லாம் கவலைப்பட கூடியவர் கிடையாது. அவர் தன்னை நோக்கி வரும் பந்தை, தனக்கு விருப்பப்பட்ட திசையில் அடிப்பதற்காக, உடலை அதற்கேற்றார்போல் கொண்டு வந்து விளையாடி பௌத்தர்களையும் சிக்ஸ்ர்களையும் விளாச கூடியவர்.

- Advertisement -

தற்போது இவரைப்பற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்து கருத்து தெரிவித்திருக்கிறார். ரிக்கி பாண்டிங் கூறும்போது ” மிகப்பெரிய பிளாட்பார்மில் ஏபி டிவில்லியர்ஸ் இருந்தபொழுது அவர் 360 டிகிரியில் விளையாடியதை போல சூரியகுமார் விளையாடுகிறார். இந்தியாவின் பேட்டிங் வரிசையில் அவர் கண்டிப்பாய் முதல் நான்கு இடங்களுக்குள் இருக்க வேண்டும். சூரியகுமார் யாதவ் உற்சாகமானவர். அவர் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் மிக நம்பிக்கையான பேட்ஸ்மேன். அவரால் எந்தச் சூழ்நிலையில் இருந்தும் ஒரு ஆட்டத்தை வென்று கொடுக்க முடியும்” என்று தெரிவித்து இருக்கிறார்!