“தெ.ஆ-ல இந்த இந்திய பையன் சாதிப்பான்.. ஆனா அவன் இதை மறக்கக்கூடாது!”- கவாஸ்கர் ஆணை!

0
343
Gavaskar

இந்திய அணி, கிறிஸ்துமஸ் முடிந்து அடுத்த நாள் டிசம்பர் 26 ஆம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக, அந்த நாட்டில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறது!

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணங்களில் இதுவரை டெஸ்ட் தொடரை மட்டும் வென்றது கிடையாது. இந்திய அணி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற ஆரம்பித்ததில், கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியாவில் கூட வெற்றி பெற்றுவிட்டது. ஆனாலும் தென் ஆப்பிரிக்காவில் இது கைகூடாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இந்திய டெஸ்ட் கேப்டன்கள் எல்லோருக்கும் ஏமாற்றம் அளிக்கும் தென் ஆப்பிரிக்காவில், இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என்கின்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது.

இந்திய அணிக்கு பல வருடங்களுக்குப் பிறகு இடதுகை ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் துவக்க வீரராக கிடைத்திருக்கிறார். மேலும் மூன்றாவது இடத்தில் அதிரடியாக விளையாட முடிந்த சுப்மன் கில் வருகிறார். விக்கெட் கீப்பிங்கில் மிகவும் முன்னேறி இருக்கும் கேஎல்.ராகுல் அணிக்கு வருவதால், அவரே விக்கெட் கீப்பராகவும் இருப்பார். இதனால் இந்திய அணியின் வலிமை அதிகரிக்கிறது.

தற்பொழுது இந்த அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் ஜெய்ஸ்வால் குறித்து கவாஸ்கர் கூறும் பொழுது “ஆமாம் நிச்சயமாக ஜெய்ஸ்வாலுக்கு தென் ஆப்பிரிக்கா ஒரு சோதனையாக இருக்கும். ஆனால் இந்த சூழ்நிலைகளிலும் அவர் சிறப்பாக விளையாடும் திறமையை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டியில் அவரிடம் நான் பார்த்தது என்னவென்றால் அவர் பந்தை தாமதமாக விளையாடுகிறார் மேலும் அவருடைய தலை உறுதியாக இருக்கிறது. பந்தின் லைனுக்கு மிகச்சரியாக செல்கிறார்.

மேலும் அவர் பந்துக்கு மிகவும் அவசரப்படக்கூடியவராக இல்லை. பந்தை வரவிட்டு தாராளமாக தாமதமாக விளையாடுகிறார். மேலும் இன்னிங்ஸ் நடுவில் அவர் தனக்கு நேரம் ஒதுக்கிக் கொள்ள விரும்புகிறார்.

மேலும் அவர் ஷார்ட் பந்துகளில் சிறந்த வீரர். தென் ஆப்பிரிக்காவில் கூக்கபுரா பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே முதல் 12 ஓவர்கள் கடினமாக இருக்கும். அதன் பிறகு எதுவும் செய்யாது. நீங்கள் ஒரு நல்ல பேட்டராக இருந்து, 12 ஓவர்கள் தப்பிவிட்டால் பெரிய ரன்கள் அடிக்க முடியும்.

எனவே ஜெய்ஸ்வால் தனக்குத்தானே சொல்லிக் கொள்ள வேண்டியது இதுதான் ‘முதலில் 10 முதல் 12 ஓவர்கள் நான் சரியாக இருந்து விட்டால், என்னால் பெரிய ரன்கள் அடிக்க முடியும் என்பதுதான்!” என்று கூறியிருக்கிறார்.