“இப்படி இங்க இதுக்கு முன்ன நடந்ததே கிடையாது.. எங்க தோல்விக்கு இதான் காரணம்!” – தென் ஆப்பிரிக்க கேப்டன் பேச்சு!

0
977
Markram

இன்று இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமான முறையில் பந்துவீச்சு மற்றும் பேட்டிகள் செயல்பட்டு எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை பெற்றது.

இந்தப் போட்டிக்கான டாஸ் நிகழ்வு நடைபெறும் பொழுது மழை வருவதற்கான அறிகுறி உடன் வானம் கொஞ்சம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனாலும் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்தார்.

- Advertisement -

பொதுவாக ஜோகனஸ்பர்க் மைதானத்தில் முதல் ஆறு ஏழு ஓவர்கள் பந்தில் கொஞ்சம் மூவ்மெண்ட் இருக்கும். பிறகு பேட்டிங் செய்வதற்கு சாதாரணமாக மாறிவிடும். அதே சமயத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்பொழுது சுழற் பந்துவீச்சு மிகச்சிறப்பாக ஈடுபடும். எனவே இந்த காரணங்களால் தென் ஆப்ரிக்க கேப்டன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்.

ஆனால் இந்த முடிவு இன்று அவர்களுக்கு முழுக்க முழுக்க தவறாக சென்றது. முதலில் பந்து வீசிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 116 ரன்களுக்கு சுருட்டியது. இந்திய அணியின் அர்ஸ்தீப் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகள் என மொத்தமாக தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டி விட்டார்கள்.

இதற்கு அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுதும் சாய் சுதர்சன் தனது அறிமுக போட்டியில் ஆட்டம் இழக்காமல் 55 ரன்கள், ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்கள் என எடுக்க, இந்திய அணி வெகு சாதாரணமாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற்றது.

- Advertisement -

தோல்விக்கு பின் பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் “இது கடினமான ஒன்று. நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோர் எடுக்க நினைத்தோம். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் நல்ல லேட்டரர் மூவ்மெண்ட் உடன் சிறப்பாக பந்து வீசினார்கள். மொத்த பாராட்டும் அவர்களுக்கே கொடுக்க வேண்டும்.

எங்களுக்கு பிரச்சனை முதல் பந்தில் இருந்தே ஆரம்பித்து விட்டது. எங்களால் அதிலிருந்து மீண்டு வந்து எதுவும் செய்ய முடியவில்லை. இதன் காரணமாகவே எங்களால் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை கூட உருவாக்க முடியவில்லை.

நாங்கள் ஆடுகளத்தை தவறாக ரீட் செய்யவில்லை. பொதுவாக இங்கு முதலில் பேட்டிங் செய்யும் பொழுது முதல் ஐந்து ஆறு ஓவர்களுக்கு பந்தில் கொஞ்சம் மூவ்மெண்ட் இருக்கும். பிறகு போகப் போக பேட்டிங் செய்வது எளிதாகிவிடும். ஆனால் இன்று பந்தில் மூமென்ட் நீண்ட நேரம் இருந்தது. இப்படி நடந்தது கிடையாது.

அதிரடியாக விளையாடுவது எங்கள் வழி என்று கிடையாது. பொதுவாக நீங்கள் அந்தந்த நேரத்தில் உங்கள் பார்ட்னர் உடன் பேசி புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். இதுதான் இங்கு மிகவும் முக்கியமானது. நாங்கள் வீரர்களை பாசிட்டிவாக இருக்க சொல்கிறோம். ஒருவேளை நாங்கள் திரும்பவும் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுப்போமா என்று கேட்டால் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!