இந்தப் பையன் உங்க இடத்தை காலி பண்ண போறான் – இந்திய அணி வீரர்களை எச்சரித்த டேல் ஸ்டெயின்!

0
1271
Steyn

ஒரு கிரிக்கெட் அணியில் இடது கை பேட்ஸ்மேன் இருப்பது கூடுதல் பலம். ஏனென்றால் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக மாறி மாறி இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் பொழுது தங்களது சீரான பந்துவீச்சை தவற விடுவார்கள்.

இது மட்டும் அல்லாமல் இடது கையில் வீசப்படும் சுழற்பந்து மற்றும் வலது கையில் வீசப்படும் மணிக்கட்டு சுழற்பந்து இரண்டையும் விளையாட அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது வசதியான ஒன்று.

- Advertisement -

மேலும் தற்காலத்தில் நவீன கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட்டில் நடு ஓவர்களில், இடது கை சுழற்பந்து மற்றும் வலது கை மணிக்கட்டு சுழற்பந்து வகைகள் வீசப்படுகிறது. அதாவது ரவீந்திர ஜடேஜா வீசுவதை போலவும், சாகல் வீசுவதை போலவுமான சுழற்பந்து வீச்சு வகைகள் வீசப்படுகிறது.

இப்படியான சுழற்பந்து வீச்சை தாக்கி விளையாட இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக இருக்கும். எனவே தற்போது எல்லா டி20 அணிகளிலும் குறைந்தது இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களாவது இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

தற்கால டி20 கிரிக்கெட்டில் நிலைமை இப்படி இருக்க, இந்திய அணியின் நிலையோ இதற்கு எதிராக இருக்கிறது. ஒருபுறம் இடதுகை பேட்ஸ்மேன் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியே போயிருக்கிறார். இன்னொரு புறம் இடதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட் பேட்டிங்கில் மிகவும் சுமாராக செயல்படுகிறார். இதனால் குறிப்பிட்ட சுழற்பந்து வீச்சு வகையைத் தாக்கி விளையாட இந்திய அணியில் நல்ல இடதுகை பேட்ஸ்மேன்கள் தற்போது இல்லை.

- Advertisement -

இந்த நிலையில்தான் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன்.
தற்போது நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பாக பேட் செய்த இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷானை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

இதுபற்றி டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது
” நான் இஷான் கிஷானுடன் ஐபிஎல் தொடரில் விளையாடிய பொழுது அவர் ஒரு குழந்தை போல இருந்தார். அவர் ஒரு ராக் ஸ்டார், அதனால் அவருக்கு ஜஸ்டின் பெபர் என்று பெயர் வைத்தோம். பின்பு அவர் மெல்ல மெல்ல திறமையில் வளர்வதை நான் பார்த்தேன்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“உருவத்தில் சிறிய குள்ளமான அந்தப் பையன், அன்றிச் நோர்க்கியா பந்துவீச்சில் அடித்த சிக்ஸர்கள் சிறியது அல்ல. அவை சரியான நேரத்தில் வலுவாக அடிக்கப்பட்ட பெரிய சிக்ஸர்கள். மேலும் ஒரு பந்து வீச்சாளரை எந்த நேரத்தில் தாக்கி விளையாடவேண்டும் என்று மிகச் சரியாக உணர்ந்து அடிக்கப்பட்ட சிக்ஸர்கள். இஷான் கிஷான் மிகச்சிறந்த வீரர். இந்திய அணியில் அவரைப்போல் உள்ள வீரர்களும், குறிப்பாக ரிஷப் பண்ட் போன்றவர்கள் இஷான் கிஷான் தங்கள் இடத்திற்கு போட்டியாக வருவார்கள் என்று உணர்ந்தால், அவர் மீது அவர்கள் கண் வைப்பார்கள். இஷான் கிஷான் அதற்கான திறமை உடைய வீரர்” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!