“இந்த சிஎஸ்கே வீரர் அடித்த சிக்ஸர் டி20 உலகக்கோப்பையில் கோலி அடித்த சிக்ஸருக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை” – முகமது கைஃப்

0
920
Kaif

நடந்து முடிந்த ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே வீரர் ஒருவர் அடித்த சிக்ஸர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் விராட் கோலி நேராக அடித்த சிக்ஸருக்கு சமம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்திருக்கிறார்!

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மெல்போர்ன் மைதானத்தில் சந்தித்தது.

- Advertisement -

இந்தப் போட்டி ஹைகோரிங் மேட்சாக இல்லை என்றாலும், ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது.

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு மடமடவென்று நான்கு விக்கெட்டுகள் விழ, ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து விராட் கோலி மெல்ல மெல்ல இந்திய அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.

விராட் கோலியின் இந்த இன்னிங்ஸில் கடைசிக் கட்டத்தில் நேராக அடிப்பதற்குச் சுத்தமாக ஏதுவாக இல்லாத பந்தை, பேக் புட்டில் இருந்து நேராக சிக்ஸருக்கு விராட் கோலி தூக்கி அடித்து ஆச்சரியப்படுத்தி இருப்பார். இப்படி அடிப்பது சாத்தியமே இல்லாத விஷயம் என்று உலகமே வியந்து பார்த்த ஒரு நிகழ்வு அது.

- Advertisement -

தற்பொழுது விராட் கோலி அடித்த அந்த ஷாட் உடன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மோகித் சர்மா பந்துவீச்சில் அம்பதி ராயுடு பேக் புட்டில் அடித்த சிக்ஸருக்கு இணையானது என்று முகமது கைஃப் புகழ்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது
“அம்பதி ராயுடுவின் அந்த இம்பாக்ட் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தை மாற்றி அமைத்தது. ஆட்டம் இருந்த சூழலில் அவரது இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது. பேக் புட்டில் அவர் அடித்த சிக்ஸ் அந்த மேட்ச்சில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த ஷாட் ஆகும்.

கடந்த ஆண்டு மெல்போர்னில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி அடித்த அந்த அசாத்தியமான சிக்ஸரை போலவே அம்பதி ராயுடு அடித்த சிக்ஸரும் இருந்தது. ராயுடு உணர்ச்சிவசப்பட்டாலும் ஐபிஎல் வாழ்க்கையை இவ்வளவு உயரத்தில் முடிப்பதற்கு முழுப்புகழும் அவருக்கு உண்டு!” என்று கூறியிருக்கிறார்!