“உலக கிரிக்கெட்டையே இந்த 30 வயது இந்திய வீரர் காப்பாற்றுவார்” – இர்பான் பதான் பேச்சு!

0
1031
Irfan

கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் மிகப்பெரிய ஆதிக்கத்த செலுத்தும் நாடாக கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இருந்து வந்தது. அந்த அணிக்கு என்று பாரம்பரியமிக்க கிரிக்கெட் கவுரவம் உண்டு.

இங்கிலாந்து தனது உள்நாட்டு கிரிக்கெட் தொடரான கவண்டி போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்கும் அளவுக்கு, உள்நாட்டு தொடரை மிகச் சிறப்பான முறையில் வைத்திருந்தது.

- Advertisement -

இன்றைய காலக்கட்ட ஐபிஎல் போல, அன்றைய காலக்கட்டத்தில் உலக கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சம்பாதித்தார்கள்.

இங்கிலாந்துக்கு அடுத்து வெற்றிக்கு தீவிரமாக உழைப்பதன் மூலமாக ஆஸ்திரேலியா தனித்த கிரிக்கெட் பாரம்பரியத்தை கொண்ட நாடாக உருவெடுத்தது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் அதிரடி அணுகுமுறை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.

இந்த இரு நாடுகளின் கிரிக்கெட் ஆதிகத்துக்கு பிறகு தற்போது இந்தியா கிரிக்கெட் உலகில் தனித்த ஆதிக்கத்தை செலுத்தும் தனி நாடாக உருவெடுத்திருக்கிறது. இதற்கு இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கையும், ஐபிஎல் தொடர் மூலம் கிடைக்கும் வருமானமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

- Advertisement -

கிரிக்கெட் வடிவத்தில் ரசிகர்களின் வரவேற்பு மிகக் குறைவாக இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் உலகின் அறிவிக்கப்படாத தூதுவராக விராட் கோலி விளங்கி வந்தார். அவர் களத்தில் காட்டும் ஆக்ரோஷ அணுகுமுறையும் வெற்றிக்காக போராடும் அணுகுமுறையும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விராட் கோலிக்கு பிறகு அப்படியான இடத்தை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எடுத்திருப்பதாக, இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் கருதுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்பொழுது “அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தந்தால், அப்படி ஒருவரை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறந்த பிராண்ட் அம்பாசிட்டரை பார்க்க முடியாது. பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட் செழித்து வளரும்.

அவருடைய பந்துவீச்சு அணுகுமுறையை நான் ரசிக்கிறேன். குறிப்பாக முதுகில் அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவர் பந்து வீசிய விதம் இந்தியக் கிரிக்கெட்டுக்கு மட்டும் அல்லாமல் உலக கிரிக்கெட்டுக்கும் உத்வேகம் கொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!