“இந்த 15 வயசு பையன், ரெண்டு உள்நாட்டு பிளேயருக்கு ஏலத்துல நல்ல வாய்ப்பு இருக்கு!” – கேள்விப்படாத வீரர்களை கணித்து சொல்ற சின்ன தல!

0
755
Raina

உலகின் நம்பர் ஒன் டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு மினி ஏலம் நாளை கேரள மாநிலம் கொச்சி நகரில் மதியம் நடக்க இருக்கிறது!

மெகா ஏலத்தில் ஒரு அணியின் வெற்றி பாதிக்குப் பாதி உறுதி செய்யப்படுகிறது என்று கூறுவார்கள். இப்படிப் பாதி வெற்றியைப் பெறுவதற்காகத் தேர்வு செய்யப்படும் அணியில், தெரிந்தோ தெரியாமலோ, சில தவிர்க்க முடியாத காரணங்களாலோ சில குறைகள் இருக்கும். இப்படியான குறைகளைச் சரி செய்து சரியான அணிக் கலவையைக் கண்டுபிடிக்கும் இன்னொரு முயற்சிக்கான வாய்ப்புதான் ஐபிஎல் மினி ஏலம்!

- Advertisement -

மெகா ஏலத்தை விட மினி ஏலத்தில் சில குறிப்பிட்ட வீரர்களுக்கான விலை மிக அதிகமாக இருக்கும். ஏனென்றால் அந்த நேரத்தில் அணிகளுக்குக் குறிப்பிட்ட சில வீரர்கள் மட்டுமே தேவை. இதனால் அணிக்கலவையை சரியாக அமைப்பதை மட்டும் தான் பார்ப்பார்கள் தவிர விலையைப் பற்றி கவனிக்க மாட்டார்கள். சென்னை அணி எதிர்பார்க்காத விலை கொடுத்து கடந்த முறை ஒரு மினி ஏலத்தில் பியூஸ் சாவ்லா, கிருஷ்ணப்பா கௌதம் ஆகியவரை வாங்கி இருந்தது ஒரு உதாரணம்!

தற்போது இந்த மினி ஏலத்தில் யாரெல்லாம் அதிக விலைக்குப் போவார்கள் என்கின்ற விஷயம் ஓரளவுக்கு மேல் வெளியில் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதிகம் ரசிகர்களால் கவனிக்கப்படாத அணி நிர்வாகங்களில் கவனிக்கப்படுகிற இந்திய உள்நாட்டு வீரர்கள் பற்றியும் வெளிநாட்டு வீரர்கள் பற்றியும், இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சின்ன தல சுரேஷ் ரெய்னா சில முக்கிய தகவல்களை கூறி இருக்கிறார்.

இது பற்றி பேசி உள்ள அவர் ” நான் சையது முஸ்டாக் அலி டிராபியில் முஜ்தபா யூசுப் உடன் விளையாடினேன். 20 வயதான இவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இவர் நல்ல அதிரடியாகவும், ஸ்விங்கில் கட்டுப்பாடு கொண்டவராகவும் இருக்கிறார். மேலும் இந்த வருட சையது முஸ்டாக் அலி டிராபியில் அதிக ரன் அடித்தவர்களில் ஐந்து இடங்களில் இருப்பவரும், அதிக சிக்ஸர்கள் விளாசியவரும்,150 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவருமான சௌராஷ்டிரா அணியைச் சேர்ந்த 27 வயதான வலது கை பேட்ஸ்மேன் ஸ்மார்த் வியாஸ் இருக்கிறார். இவர்களுக்கு இந்த ஏலத்தில் ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும்!”

- Advertisement -

மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 15 வயது ஆறு அடி இரண்டு அங்குலம் உள்ள அல்லாஹ் முகமது கசன்ஃபர் என்ற ஆப் ஸ்பின்னர் இந்த மினி ஏலத்தில் பெயர் கொடுத்திருக்கிறார். இவர் முதலில் வேகப்பந்துவீச்சாளராக ஆரம்பித்து பின்பு சுழற் பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் பிக்பேஸ் தொடரில் இவர் பெயர் கொடுத்து ஆனால் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் குறித்து சுரேஷ் ரெய்னா பேசும் பொழுது ” 15 வயதான மிக உயரமான இவரும் இந்த ஏலத்திற்கு வருகிறார். இவர் ஒரு ஆப் ஸ்பின்னர் என்பது முக்கியம். மேலும் இவரது உயரம் ஒரு அம்சம். தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து நிறைய கிரிக்கெட் திறமைகள் வருகிறார்கள்!” என்று பேசியிருக்கிறார்!